ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact CheckFact Check: ஈரோடு கிழக்கில் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட பிரஷர் குக்கர் வெடித்ததாகப் பரவும் கர்நாடகா செய்தி!

Fact Check: ஈரோடு கிழக்கில் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட பிரஷர் குக்கர் வெடித்ததாகப் பரவும் கர்நாடகா செய்தி!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

ஈரோடு கிழக்கில் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட பிரஷர் குக்கர் வெடித்து பெண் வாக்காளர் படுகாயம் என்பதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு திமுகவினர் கொடுத்த பிரஷர் குக்கர் வெடித்து பெண் வாக்காளர் படுகாயம்

”ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு திமுகவினர் கொடுத்த பிரஷர் குக்கர் வெடித்து பெண் வாக்காளர் படுகாயம்” என்பதாக இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு திமுகவினர் கொடுத்த பிரஷர் குக்கர் வெடித்து பெண் வாக்காளர் படுகாயம்
Screenshot From Twitter @GowriSankarD_
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு திமுகவினர் கொடுத்த பிரஷர் குக்கர் வெடித்து பெண் வாக்காளர் படுகாயம்
Screenshot from Twitter @eps_squad
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு திமுகவினர் கொடுத்த பிரஷர் குக்கர் வெடித்து பெண் வாக்காளர் படுகாயம்
Screenshot From Twitter @Gowthamadmk1216

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: திமுக மம்தாவோடு கூட்டணி பேசுவது நல்லதல்ல என்று அருணன் கூறியதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

Fact Check / Verification

ஈரோடு கிழக்கில் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட பிரஷர் குக்கர் வெடித்து பெண் வாக்காளர் படுகாயம் என்று பரவும் செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

சமூக வலைத்தளத்தில் பரவிய தகவலில் தந்தி டிவியின் வீடியோ ஸ்க்ரீன்ஷாட் ஒன்று இடம்பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து, தந்தி டிவி செய்திகளில் இதுகுறித்து ஆராய்ந்தபோது,

“கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி பெங்களூரு சோமேஸ்வரா காலனியில் இலவசமாக குக்கர் வழங்கப்பட்ட நிலையில், பெண் ஒருவர் அக்குக்கரில் சமைக்கும்போது குக்கர் வெடித்து அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது”

என்று முழு வீடியோ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட செய்தியே, ஈரோடு கிழக்கில் நடைபெற்ற சம்பவமாக பரவி வருகிறது.

தொடர்ந்து, இச்செய்தியை பல்வேறு செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அவற்றை, இங்கே மற்றும் இங்கே, இங்கே, இங்கே படியுங்கள்.

Also Read: Fact Check: அண்ணாமலை பொய்யான தகவல் வெளியிட்டார் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறினாரா?

Conclusion

ஈரோடு கிழக்கில் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட பிரஷர் குக்கர் வெடித்து பெண் வாக்காளர் படுகாயம் என்று பரவும் செய்தி தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
YouTube Video From, Thanthi Tv, Dated February 22, 2023
News Report From, OneIndia Tamil, Dated February 22, 2023
News Report From, IBC Tamil

உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular