Fact Check
தமிழக காவல்துறை அலட்சியத்தால் பைக்கில் இருந்து விழுந்து இறந்த குழந்தை என்று பரவும் தகவல் உண்மையா?
Claim
தமிழக காவல்துறை அலட்சியத்தால் பைக்கில் இருந்து விழுந்து இறந்த குழந்தை
Fact
வைரலாகும் நிகழ்வு கர்நாடகாவில் நடைபெற்றதாகும்.
தமிழக காவல்துறை அலட்சியத்தால் பைக்கில் இருந்து விழுந்து இறந்த குழந்தை என்று செய்தியுடன் கூடிய தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற தம்பதியை பிடித்து இழுத்த போலீஸ். பைக்கில் இருந்த மூன்று வயது குழந்தை கீழே
விழுந்து பலியான சோகம், குழந்தையின் பெற்றோர் சாலையில் அமர்ந்து போராட்டம். #பாதுகாப்பில்லா_திமுகமாடல்
#Resign_Stalin” என்று இந்த நியூஸ்கார்ட் செய்தி பரவி வருகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
தமிழக காவல்துறை அலட்சியத்தால் பைக்கில் இருந்து விழுந்து இறந்த குழந்தை என்று பரவும் நிகழ்வு குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
பரவிவருகின்ற தந்தி டிவி நியூஸ்கார்டில் ஓரத்தில் கர்நாடகா என்று எழுதியிருப்பது நமக்குக் கிடைத்தது. எனவே, அந்த செய்தி குறித்து ஆராய்ந்தபோது ”Three-year-old dies during vehicle check in Mandya” என்கிற செய்தி The Hindu செய்தி ஊடகத்தில் இடம்பெற்றிருந்தது.

கர்நாடகா மாண்டியாவில் காவல்துறை அதிகாரிகளின் அலட்சிய நடவடிக்கையால் குழந்தை வண்டியில் இருந்து கீழே விழுந்து இறந்தது என்று TV9 வெளியிட்டுள்ள வீடியோ செய்தியிலும் இந்த நியூஸ்கார்டில் இடம்பெற்றுள்ள பெற்றோரைக் காண முடிந்தது.
ஹிருதிக்ஷா என்கிற அக்குழந்தையை நாய் கடித்த நிலையில் அவரை சிகிச்சைக்காக அழைத்து சென்ற போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என்பதும் செய்திகளில் இடம்பெற்றுள்ளது.
குறிப்பிட்ட செய்தியே தற்போது திமுக ஆட்சியில் காவல்துறை அலட்சியத்தால் தமிழகத்தில் குழந்தை இறந்ததாகப் பரவி வருகிறது.
Also Read: முதல்மரியாதை படத்தின் கதை தன்னுடையது என்று பேசினாரா சீமான்?
Conclusion
தமிழக காவல்துறை அலட்சியத்தால் பைக்கில் இருந்து விழுந்து இறந்த குழந்தை என்று பரவும் நிகழ்வு கர்நாடகாவில் நடைபெற்றது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video From, TV9 Kannada, Dated May 26, 2025
YouTube Video From, News 18 Kannada, Dated May 26, 2025
Report From, The Hindu, Dated May 27, 2025