Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
கரூர் சம்பவத்தில் மூர்ச்சையடைந்த இளைஞனை CPR கொடுத்து காப்பாற்ற முயன்ற பெண் காவலர்.
வைரலாகும் தகவல் தவறானதாகும். வைராலாகும் வீடியோவுக்கும் கரூர் சம்பவத்திற்கும் தொடர்பில்லை. இச்சம்பவம் பீகாரில் கடந்த ஜூலை மாதம் நடந்ததாகும். மகன் உயிரிழந்ததை ஏற்காமல், இறந்த அவனின் உடலுக்கு ஊர்க்காவல் படையை சேர்ந்த பெண் காவலர் ஒருவர் CPR கொடுத்த சம்பவமே இவ்வாறு பரப்பப்படுகின்றது.
கரூர் துயர சம்பவம் காரணமாக தவெக, திமுக, தமிழ்நாடு காவல்துறை என பலர் குறித்து பல்வேறு விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
இந்நிலையில் “இந்த சம்பவத்தில் காவல்துறையை குறை சொல்லும் தற்குறிகளே பாருங்க டா இவர்களை குறை சொல்ல உங்களுக்கு எப்படிடா மனசு வருது?” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
அவ்வீடியோவில் ஊர்க்காவல் படையை சேர்ந்த பெண் காவலர் ஒருவர் இளைஞர் ஒருவருக்கு CPR (உயிர் மீட்பு சுவாசம்) கொடுப்பதை காண முடிந்தது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கரூர் துயர சம்பவத்திற்கு பின் சிரித்துக்கொண்டே புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தாரா விஜய்?
கரூர் சம்பவத்தில் மூர்ச்சையடைந்த இளைஞனை பெண் காவலர் ஒருவர் CPR கொடுத்து காப்பாற்ற முயன்றதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து அவ்வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் லோக்மத் டைம்ஸ் ஊடகத்தில் ஆகஸ்ட்1, 2025 அன்று இவ்வீடியோ குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அதாவது கரூர் சம்பவம் நடப்பதற்கு ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு முன்பு இச்செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
பீகாரில் உயிரற்றிருந்த மகனுக்கு ஊர்க்காவல் படையை சேர்ந்த பெண் காவலர் ஒருவர் CPR கொடுத்ததாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அச்செய்தியில் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, பீகாரின் அரா மாவட்டத்தில் சுமன் தேவி-சந்தோஷ் சர்மாவின் மகனான மோஹித் ராஜ் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அருகிலிருந்தவர்கள் இவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மோஹித் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விஷயமறிந்து மோஹித்தின் தாயாரும் ஊர்க்காவல் படையை சார்ந்த காவலருமான சுமன் தேவி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் கூறியதை ஏற்க மறுத்து இறந்த மோஹித் ராஜின் உடலுக்கு CPR கொடுத்துள்ளார்.
தொடர்ந்து தேடுகையில் கடந்த ஜூலை மாதத்திலேயே அமர் உஜாலா, ABP லைவ், ஜாக்ரன் உள்ளிட்ட ஊடகங்களிலும் இதே தகவலுடன் வைரலாகும் வீடியோ குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவுக்கும் கரூர் சம்பவத்திற்கும் தொடர்பில்லை என தெளிவாகின்றது.
Also Read: ரசிகனிடம் பிளாக் டிக்கெட் விற்று சம்பாதித்தேன் என்று விஜய் கூறினாரா?
கரூர் சம்பவத்தில் மூர்ச்சையடைந்த இளைஞனை பெண் காவலர் ஒருவர் CPR கொடுத்து காப்பாற்ற முயன்றதாக பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
பீகாரில் மகன் உயிரிழந்ததை ஏற்காமல், இறந்த அவனின் உடலுக்கு ஊர்க்காவல் படையை சேர்ந்த பெண் காவலர் ஒருவர் CPR கொடுத்த சம்பவமே இவ்வாறு பரப்பப்படுகின்றது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report by Lokmat Times, dated August 1, 2025
Report by Amar Ujala, dated July 31, 2025
Report by ABP Live, dated July 31, 2025
Report by Jagran, dated July 30, 2025
Vijayalakshmi Balasubramaniyan
October 7, 2025
Vijayalakshmi Balasubramaniyan
October 2, 2025
Ramkumar Kaliamurthy
October 1, 2025