Claim: உதயநிதி மனைவி கிருத்திகாவின் நடனம் என பரவும் வீடியோ
Fact: வைரலாகும் வீடியோவில் இருப்பது கிருத்திகா உதயநிதி அல்ல. மங்களூரை சேர்ந்த திரிஷா ஷெட்டி எனும் நடனம் மற்றும் மேடை நாடகக் கலைஞராவார்.
“தமிழக முதல்வரின் மருமகளும், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியின் மனைவியுமான கிருத்திகாவின் அற்புத நடனம்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பங்களாதேஷில் இந்து குழந்தையின் நிலை என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check/Verification
உதயநிதி மனைவி கிருத்திகாவின் நடனம் என பரவும் வீடியோவை உற்று நோக்கியதில் வைரலாகும் வீடியோவிலிருப்பவரின் முகத்தோற்றம் கிருத்திகாவின் முகத்தோற்றத்திலிருந்து மாறுபட்டிருப்பதை காண முடிந்தது.

இதனையடுத்து வைரலாகும் வீடியோ குறித்து ஆராய்ந்தோம். அதில் வைரலாகும் வீடியோவில் இருப்பவர் கிருத்திகா உதயநிதி அல்ல, மங்களூரை சேர்ந்த திரிஷா ஷெட்டி என்பவர் என தெரிய வந்தது.

திரிஷா ஷெட்டி நாடகம் மற்றும் நடனக் கலைஞராவார். இவரின் அதிகாரப்பூரவ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் வீடியோ ஏப்ரல் 23, 2024 அன்று பகிரப்பட்டுள்ளதை காண முடிந்தது.

Conclusion
உதயநிதி மனைவி கிருத்திகாவின் நடனம் என சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ தவறானதாகும். உண்மையில் அவ்வீடியோவில் இருப்பது கிருத்திகா உதயநிதி அல்ல, மங்களூரை சேர்ந்த திரிஷா ஷெட்டி எனும் நடனம் மற்றும் மேடை நாடகக் கலைஞராவார்.
இந்த உண்மையானது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Instagram post from Trisha Shetty, Dated April 23, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)