Fact Check
துணை முதலமைச்சர் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தாரா விஜய்?
Claim
துணை முதலமைச்சர் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் தவெக தலைவர் விஜய்.
Fact
வைரலாகும் வீடியோ செயற்கை நுண்ணறிவு மூலம் எடிட் செய்யப்பட்ட போலியான வீடியோவாகும்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றைய தினம் (நவம்பர் 27) தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் துணை முதலமைச்சர் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: எத்தியோப்பியா எரிமலை வெடிப்பின் காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check/Verification
தவெக தலைவர் விஜய் துணை முதலமைச்சர் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து தவெக தலைவர் விஜய்யின் சமூக ஊடகப் பக்கங்களில் இவ்வீடியோ குறித்து தேடினோம்.
அத்தேடலில் விஜயின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் உதயநிதி பிறந்த தினமான நேற்று (நவம்பர் 27) முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. இதுத்தவிர்த்து வேறு எந்த வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கவில்லை.
இதனை தொடர்ந்து தேடுகையில் நவம்பர் 15 அன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து கண்டனம் தெரிவித்து வீடியோ ஒன்றை விஜய் வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
அவ்வீடியோவிலிருந்த விஜயின் தோற்றம் மற்றும் பின்புலம் வைரலாகும் வீடியோவுடன் ஒற்றுப்போவதை காண முடிந்தது.

இதனையடுத்து வைரலாகும் வீடியோவை கூர்மையாக கவனிக்கையில் அவ்வீடியோவில் விஜய்யின் அசைவுகள் மற்றும் வாயசைவுகள் இயல்பானதாக இல்லாமல் இருப்பதை காண முடிந்தது. அதேபோல் அவரின் குரலும் வேறுபட்டு செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டதுபோல் இருந்தது.
ஆகவே செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப்ஃபேக் வீடியோக்களை கண்டறிய உதவும் கருவிகளான Hive Moderation, Resemble.ai, Hiya Deepfake Voice Detector உள்ளிட்டவற்றில் வைரலாகும் வீடியோ குறித்து சோதித்தோம்.



அச்சோதனையில் வைரலாகும் வீடியோ செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றப்பட்ட வீடியோ என பதில் வந்தது.
Also Read: தவெக தலைவர் விஜய் காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக்குப்பின் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளாரா?
Conclusion
தவெக தலைவர் விஜய் துணை முதலமைச்சர் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாக பரப்பப்படும் வீடியோ செயற்கை நுண்ணறிவு மூலம் எடிட் செய்யப்பட்ட போலியான வீடியோவாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X post by Actor and Politician Vijay, dated November 15, 2025
Hive Moderation
Resemble.ai
Hiya Deepfake Voice Detector