Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
தமிழக முதல்வர் லட்சத்தீவை கட்சத்தீவு என்று குறிப்பிட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
கேரளாவுக்கு மேற்கே 200-300 கி.மீ தொலைவில் அரபிக்கடலில் அமைந்துள்ளது லட்சத்தீவு. மொத்தமாகவே 32 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு கொண்ட லட்சத்தீவு 36 தீவுகளாக அமைந்துள்ளது.
இத்தீவானது இந்திய சுதந்திரத்தின்போது சென்னை மாகாணத்துக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. பின்னர் மாநிலங்கள் மறுசீரமைப்பின்போது இத்தீவானது யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.
லட்சத்தீவின் மொத்த மக்கள்தொகை ஒரு லட்சத்துக்கும் குறைவே. இவர்களில் பெரும்பான்மையோர் மலையாளம் பேசும் முஸ்லிம்கள். மாட்டிறைச்சிதான் இந்த மக்களின் பிரதான உணவு. மீன்பிடித்தல், மீன் பதப்படுத்துதல், மீன் ஏற்றுமதி ஆகியவை லட்சத்தீவு மக்களின் முக்கியத் தொழில்.
அங்கு தென்னைமரங்கள் அதிகமாக இருப்பதால் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் வணிகமும் பெரியளவில் மேற்கொள்ளப்படுகிறது. சுற்றுலா மூலம் வருவாய் கிடைக்கிறது. பங்கராம் தீவு தவிர லட்சத்தீவின் மற்ற அனைத்துப் பகுதிகளிலும் மதுவுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மற்ற யூனியன் பிரதேசங்களைப்போல் லட்சத் தீவுக்கு துணை நிலை ஆளுநர்கள் கிடையாது. இத்தீவின் நிர்வாகத்தை நிர்வகிக்க அட்மினிஸ்ட்ரேட்டர் (Administrator) என்ற பெயரில் தலைமை நிர்வாகி ஒருவர் மட்டுமே உள்ளார், அவரும் மத்திய அரசு தரப்பிலிருந்தே நியமிக்கப்படுவார்.
லட்சத்தீவில் முன்னதாக தினேஷ் ஷர்மா என்பவர் அட்மினிஸ்ட்ரேட்டராக இருந்தார். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்ததைத் தொடர்ந்து, குஜராத்தைச் சேர்ந்த பிரபுல் கோடா படேல் இப்பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.
இவர் அட்மினிஸ்ட்ரேட்டராக பதவியேற்றப்பின் வழக்கத்திற்கு மாறான பல சட்டங்களை புதிதாக கொண்டு வந்துள்ளார்.
லட்சத்தீவில் தற்போது வரை வெளியாட்கள் யாரும் நிலங்களை வாங்க முடியாது. ஆனால், இந்த புதிய விதிமுறைகள் வெளிநபர்கள் அங்கு நிலங்களை வாங்குவதற்கு வழிகை செய்யுமாறு உள்ளது.
ஆனால் லட்சத்தீவானது குற்றங்கள் நிகழாத பகுதியாக லட்சத்தீவு இதுவரை இருந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சட்டத்தை மீறினால் மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்படும். சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும். ரூ.5 லட்சம்வரை அபராதம் விதிக்கப்படும் ஆனால் லட்சத்தீவு மக்களின் பிரதான உணவு மாட்டிறைச்சிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட சட்டங்கள் யாவும் இதுநாள் வரை அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்து வந்த லட்சத்தீவு மக்களின் வாழ்வியலை முற்றிலும் புரட்டிப் போட்டுள்ளது.
ஆகவே இந்த சட்டங்களளுக்கு எதிராகவும், இந்த சட்டங்களுக்கு காரணமான பிரபுல் கோடா படேலுக்கு எதிராகவும் பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
நெட்டிசன்களும் #SaveLakshadweep எனும் ஹேஷ்டேகை உருவாக்கி இச்சட்டங்களுக்கு எதிரான தங்கள் கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் லட்சத்தீவை கட்சத்தீவு என்று குறிப்பிட்டு பிரபுல் கோடா படேலை திரும்ப பெற வேண்டும் என்று பிரதமருக்கு கோரிக்கை வைத்ததாக நியூஸ் 7 தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Archive Link: https://archive.ph/UGymA
Archive Link: https://archive.ph/yU8VE
Archive Link: https://archive.ph/LJN8k
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
லட்சத்தீவை, கட்சத்தீவு என்று தமிழக முதல்வர் குறிப்பிட்டதாக செய்தி பரவியதைத் தொடர்ந்து, முன்னதாக உண்மையிலேயே முதல்வர் இவ்வாறு குறிப்பிட்டாரா என்பதை ஆய்வு செய்தோம்.
அந்த ஆய்வில் தமிழக முதல்வர் லட்சத்தீவு அதிகாரி பிரபுல் கோடா படேலை திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமருக்கு கோரிக்கை விடுத்து தனது அதிகாரப் பூர்வ டிவிட்டர் கணக்கு வழியாக பதிவு ஒன்றை பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது.
அப்பதிவில்,
“#Lakshadweep-இல் திரு. பிரஃபுல் கோடா படேல் என்ற அதிகாரி மக்கள் விரோதச் சட்டங்களை வலுக்கட்டாயமாகத் திணித்து அங்கு வாழும் இசுலாமியர்களை அந்நியப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் வேதனை அளிக்கிறது.
தலையிட்டு அவரைத் திரும்பப் பெற வேண்டும். பன்முகத்தன்மையே நம் நாட்டின் பலம்!”
என்று பதிவிடப்பட்டிருந்தது.
இதன்படி பார்த்தால் ஸ்டாலின் அவர்கள் லட்சத்தீவை கட்சத்தீவு என்று குறிப்பிட்டார் என்று பரவும் தகவல் பொய்யான ஒன்று என்பது நிருபணமாகின்றது.
உண்மை இவ்வாறு இருக்க, எதன் அடிப்படையில் நியூஸ் 7 தொலைக்காட்சி இவ்வாறு ஒரு பொய் தகவலை பதிவிட்டது என்பதை அறிய, நியூஸ்7 தொலைக்காட்சியின் சமூக வலைத்தளப் பக்கங்களில் வைரலாகும் நியூஸ் கார்ட் குறித்து தேடினோம்.
இந்த தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்ட பொய்யான ஒன்று என்பதை நம்மால் அறிய முடிந்தது. நியூஸ் 7 தமிழ் உண்மையில் முதல்வர் குறித்த மேற்கண்ட செய்தியில் ‘லட்சத்தீவு’ என்றே குறிப்பிட்டுள்ளது. இதனை ‘கட்சத் தீவு’ என்று மாற்றி முதல்வர் குறித்து பொய்யான தகவலை விஷமிகள் பரப்பி வருகின்றனர்.
முதல்வர் லட்சத்தீவை கட்சத் தீவு என்று குறிப்பிட்டதாக பொய்யான நியூஸ்கார்ட் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நியூஸ் 7 தொலைக்காட்சி இதனை மறுத்து மறுப்பு செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் தமிழக முதல்வர் லட்சத்தீவை கட்சத்தீவு என்று குறிப்பிட்டதாக கூறி வைராலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
M.K.Stalin’s Official Twitter Handle: https://twitter.com/mkstalin/status/1397832638262480903
News 7 Tamil:–
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
July 4, 2025
Ramkumar Kaliamurthy
June 30, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 30, 2025