ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkலட்சுமி ராமகிருஷ்ணன் பாஜகவிலிருந்து விலகியதாக பொய் செய்தி பரப்பிய தினகரன், சத்யம் நியூஸ்!

லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜகவிலிருந்து விலகியதாக பொய் செய்தி பரப்பிய தினகரன், சத்யம் நியூஸ்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜகவிலிருந்து விலகியதாக தினகரன், சத்யம் நியூஸ் உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

லட்சுமி ராமகிருஷ்ணன் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகின்றார். இது தவிர்த்து ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் ஆகிய திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.

இவர் பாஜகவில் உறுப்பினராக இருந்தார் என்றும், இப்போது இவர் கட்சியிலிருந்து விலகிவிட்டார் என்றும் தினகரன், சத்யம் நியூஸ் உள்ளிட்ட ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ளது.

லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜகவிலிருந்து விலகியதாக  ஊடகங்கள் வெளியிட்ட செய்தி
Screenshot from Twitter @DinakaranNews
லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜகவிலிருந்து விலகியதாக  ஊடகங்கள் வெளியிட்ட செய்தி - 01
Screenshot from Youtube / Sathyam News

ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மது அருந்தியதால் அண்ணாமலை திருப்பதியில் 2 மணி நேரம் காக்க வைக்கப்பட்டதாகப் பரவுகின்ற பொய்யான தகவல்!

Fact Check/Verification

லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜகவிலிருந்து விலகியதாக தினகரன், சத்யம் நியூஸ் உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

அந்த ஆய்வில் இத்தகவல் பொய்யானது என்று தெரிய வந்துள்ளது. லட்சுமி ராமகிருஷ்ணன் சத்யம் நியூஸ் சேனலுக்கு சமீபத்தில் நேர்காணல் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த நேர்காணலை ‘பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை பாஜகவில் இருந்து விலகுகிறேன் – லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி’ என்று தலைப்பிட்டு சத்யம் நியூஸ் அதனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது.

அந்த நேர்காணலை முழுமையாக பார்த்து ஆராய்கையில் எந்த ஒரு இடத்திலும் தான் பாஜகவின் உறுப்பினர் என்றோ அல்லது பாஜகவிலிருந்து விலகியவிட்டேன் என்றோ லட்சுமி ராமகிருஷ்ணன் குறிப்பிட்டிருக்கவில்லை. மாறாக, நான் பாஜக ஆளில்லை என்றும், தான் எந்த கட்சியை சாரதவர் என்றும் இப்பேட்டியின் 18 ஆவது நிமிடங்களில் லட்சுமி ராமகிருஷ்ணன் குறிப்பிட்டிருப்பதை காண முடிந்தது.

‘பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை பாஜகவில் இருந்து விலகுகிறேன் – லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி’ என்று இப்பேட்டிக்கு பொய்யான தலைப்பை சத்யம் நியூஸ் வைத்துள்ளது என்று இப்பேட்டியை முழுமையாக கண்டபின் நம்மால் அறிய முடிந்தது.

இந்த தலைப்பை மட்டுமே அடிப்படையாக வைத்துக் கொண்டு தினகரன் உள்ளிட்ட ஊடகங்களும்  செய்தி வெளியிட்டுள்ளது. தினகரன் வெளியிட்டுள்ள செய்தியில், பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தான் தற்போது பாஜவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.  அதில், ‘பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் விலகுவதாக’வும் அவர் தெரிவித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.

லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜகவிலிருந்து விலகியதாக  ஊடகங்கள் வெளியிட்ட செய்தி - 02
Screengrab from Dinakaran Article

இக்கருத்தை லட்சுமி ராமகிருஷணன் அப்பேட்டியில் எங்கும் தெரிவித்திருக்கவில்லை.

தொடர்ந்து  இதுக்குறித்து தேடுகையில் லட்சுமி ராமகிருஷ்ணன் தினகரன் வெளியிட்ட செய்தியை டேக் செய்து டிவீட் ஒன்றை செய்துள்ளதை காண முடிந்தது.

அந்த டிவீட்டில்,

நீங்கள் ஒரு மரியாதைக்குரிய தினசரி! இதுபோன்ற பொய் செய்திகளை தயவு செய்து பிரசுரிக்காதீர்கள். நான் பாஜகவில் எப்போதும் சேரவே இல்லை. நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல் எந்த ஒரு கருத்தையும் கூறியதும் இல்லை. முக்தார் அக்தர் (சத்யம் நியூஸ் நெறியாளர்) இவ்வாறு ஒரு பொய்யான தகவலை பரப்பியுள்ளார். தயவு செய்து வீடியோவை காணவும்.

என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  

   

லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜகவிலிருந்து விலகியதாக  ஊடகங்கள் வெளியிட்ட செய்தி - 03

இதேபோல், ‘நான் எந்த கட்சியிலும் இல்லை. எந்த கட்சியின் தொடர்போ அல்லது ஆதரவோ எனக்கு இல்லை. அரசியலில் நுழையும் திட்டம் இல்லை. நான் ஆன்மீகத்தை ஏற்க விரும்புகிறேன், மதத்தையோ அல்லது மத அடையாளங்களையோ அல்ல’ என்று குறிப்பிட்டு மற்றொரு டிவீட்டை லட்சுமி ராமகிருஷ்ணன் பதிவிட்டுள்ளதையும் காண முடிந்தது.

லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜகவிலிருந்து விலகியதாக  ஊடகங்கள் வெளியிட்ட செய்தி - 04

இதனையடுத்து தமிழ்நாடு பாஜகவின் சமூக ஊடக அணியின் மாநிலத்தலைவர் சிடிஆர் நிர்மல்குமாரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் இத்தகவல் குறித்து விசாரிக்கையில், இத்தகவல் பொய்யானது. லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜகவில் எப்போதும் உறுப்பினராக இருந்ததில்லை என்று பதிலளித்தார்.

Also Read: உதவித்தொகை கிடைக்காத மூதாட்டி என்று வைரலாகும் 2018 ஆம் ஆண்டு செய்திப்புகைப்படம்!

Conclusion

லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜகவிலிருந்து விலகியதாக தினகரன், சத்யம் நியூஸ் உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்ட செய்தி முற்றிலும் பொய்யானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

Tweets from @LakshmyRamki dated January 08, 2023 at 10:37 AM and 11:01 AM
Phone Conversation with CTR Nirmalkumar, State President, BJP IT Wing dated January 09, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular