மது அருந்தியதால் பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை திருப்பதி அலிப்பிரி மலைப்பாதையில் இரண்டு மணி நேரம் காக்க வைக்கப்பட்டதாகவும், புதுவையின் உயர் பொறுப்பில் உள்ள ஒருவரின் சமரசத்திற்கு பிறகு கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டதாகவும் இரண்டு நியூஸ்கார்ட்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றன.


பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அண்ணாமலைக்கும் ஊடகவியலாளர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து அண்ணாமலை குறித்து பல்வேறு வதந்தித் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. அவ்வகையில், அவர் மது அருந்திவிட்டு திருப்பதி சென்றதாக இரண்டு நியூஸ்கார்டுகள் பரவி வருகின்றன.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இந்து கோயில்களில் முறைகேடு செய்ததாக வழக்கிட்ட ரங்கராஜன் நரசிம்மன் திமுகவினரால் தாக்கப்பட்டாரா?
Fact Check/Verification
மது அருந்தியதால் பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை திருப்பதி அலிப்பிரி மலைப்பாதையில் இரண்டு மணி நேரம் காக்க வைக்கப்பட்டதாகப் பரவுகின்ற செய்தி மற்றும் நியூஸ் கார்ட் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
அப்போது, முதலாவது நியூஸ்கார்ட் தினமலர் லோகோவுடன் பரவிய நிலையில், “தினமலர் லோகோ பயன்படுத்தி மீண்டும் போலி பதிவு: சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு ஏற்பாடு ” என்று அவர்கள் அந்த நியூஸ்கார்ட் போலியான பதிவு என அவர்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் விளக்கமளித்துள்ளனர்.
அதேபோன்று, மற்றொரு நியூஸ்கார்ட் ஜூனியர் விகடன் லோகோவுடன் பரவிய நிலையில் அதுகுறித்து விகடன் டிஜிட்டல் ஆசிரியர் பிரிட்டோவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் ”குறிப்பிட்ட நியூஸ்கார்ட் போலியானது” என்று விளக்கமளித்தார்.
குறிப்பிட்ட வைரல் நியூஸ்கார்டுகள் குறித்து அண்ணாமலை தரப்பில் அவரது செயலாளர் பிரபாகரைத் தொடர்பு கொண்டு ”இரண்டு செய்தியுமே போலியானது; அண்ணாமலை அவர்களின் நற்பெயருக்கு களங்கள் விளைவிக்கும் வகையில் உலா வருகின்றது” என்று விளக்கமளித்தார்.
Also Read: இந்திய எல்லையில் எலுமிச்சை, மிளகாயை கட்டினாரா ராஜ்நாத் சிங்?
Conclusion
மது அருந்தியதால் பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை திருப்பதி அலிப்பிரி மலைப்பாதையில் இரண்டு மணி நேரம் காக்க வைக்கப்பட்டதாகப் பரவுகின்ற செய்தி மற்றும் நியூஸ் கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
Phone Conversation With Britto, Vikatan.com, Dated January 06, 2023
Phone Conversation With Prabhakar, Annamalai PA, Dated January 06, 2023
Twitter Post, From Dinamalar, Dated January 06, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)