ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkடிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து மக்கள் நீதி மய்ய விளாத்திகுளம் வேட்பாளரா?

டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து மக்கள் நீதி மய்ய விளாத்திகுளம் வேட்பாளரா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

டிக்டாக் பிரபலமான ஜி.பி.முத்து என்பவருக்கு நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

டிக்டாக்
Source: Twitter

நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியுடன் களம் காண்கிறது.

மநீம தலைவர் கமல்ஹாசன், சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக களம் காண்கிறார். அவர் கோவை தெற்கினைத் தனது முதல் தொகுதியாகப் போட்டியிடத் தேர்வு செய்துள்ளார்.

மேலும், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து, மநீமவுடன் கூட்டணியில் இருக்கும் நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும் இன்று தனது வேட்பாளர்களை அறிவிக்கலாம் எனத் தெரிகிறது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக விளாத்திகுளம் தொகுதியில் டிக்டாக் பிரபலமான ஜி.பி.முத்து என்பவர் போட்டியிடுவதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. டிக்டாக் செயலியில் முழுமூச்சாக வீடியோக்களைப் பதிவிட்டு வந்த அவர் தற்போது யூடியூப் பக்கத்தை ஆக்கிரமித்துள்ளார்.

Source: Twitter

Archived Link: https://archive.ph/aA5ka / https://archive.ph/ijvlL

Source: Twitter

Archived Link: https://archive.ph/npKwQ

Source: Twitter

Archived Link: https://archive.ph/bTh0S

டிக்டாக்
Source: Facebook

Archived Link: https://archive.ph/oeYSt

டிக்டாக்
Source: Facebook

Archived Link: https://archive.ph/NSjhP

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, வைரலக்கும் புகைப்படம் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification:

டிக்டாக் பிரபலமான ஜி.பி.முத்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிடுவதாகப் பரவும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வு செய்தோம். ஆனால், அதில் எவ்வித செய்தியும் அதுபோன்று கிடைக்கவில்லை.

மேலும், சமயம் செய்தி ஊடகத்தின் நியூஸ் கார்டினை குறிப்பிட்ட புகைப்படத்தில் பயன்படுத்தியுள்ளதால் அவர்களுடைய சமூக வலைத்தளப் பக்கத்தை ஆராய்ந்து பார்த்தோம். ஆனால், குறிப்பிட்ட அந்த செய்தியை அவர்கள் வெளியிடவில்லை.

எனவே, அவர்களைத் தொடர்பு கொண்டு பரவும் குறிப்பிட்ட அந்த புகைப்படம் போலியாக சித்தரிக்கப்பட்டது என்பதையும் கண்டறிந்தோம்.

இதற்கெல்லாம் மேல், மக்கள் நீதி மய்யம் கட்சியில் குறிப்பிட்ட விளாத்திகுளம் தொகுதி அவர்களது கூட்டணி கட்சியான சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Twitter

தொடர்ந்து, மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த சிலரிடம் இதுகுறித்து கேட்டபோது விளாத்திகுளம் தொகுதிக்கு சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பதை நமக்கு உறுதி செய்தனர்.

Conclusion:

டிக்டாக் பிரபலமான ஜி.பி.முத்து மக்கள் நீதி மய்யம் சார்பில் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிடுவதாகப் பரவும் புகைப்படச் செய்தி தவறானதாகும்; போலியாக கிண்டலடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Fabricated

Our Sources:

MNM: https://twitter.com/maiamofficial?lang=en

Samayam Tamil: https://www.facebook.com/SamayamTamil/

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular