Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: மலபார் ஜுவல்லரி இஸ்லாமிய மாணவர்களுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை அளித்தது.
Fact: இத்தகவல் தவறானதாகும். அனைத்து சமூகத்தினருக்கும் உதவித்தொகை அளிக்கப்பட்டது.
“மலபார் ஜூவல்லரி லாபத்தில் ஒரு பங்கை கல்விக்கான உதவி தொகையாக வழங்குகிறது… வியாபாரம் அனைத்து மதத்தினரிடத்தும்.. உதவி இஸ்லாமியர்களுக்கு மட்டும்” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இந்துக்களின் அலமாரியை உடைத்து முஸ்லீம்களுக்கு பணம் கொடுப்போம் என்றாரா கார்கே?
மலபார் ஜுவல்லரி இஸ்லாமிய மாணவர்களுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை அளித்ததாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து தேடியதில் Malabar Gold and Diamonds யூடியூப் பக்கத்தில் ‘Educational Scholarship Program | CSR Initiative | Malabar Group’ என்று தலைப்பிட்டு வீடியோ ஒன்று பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
இவ்வீடியோவில் கர்நாடகாவின் பல பகுதிகளிலிருந்து உதவித்தொகை பெற்ற மாணவர்களின் படங்கள் இடம்பெற்றிருந்தது. அதில் 1:03 நேரத்தில் மங்களூரில் 630 மாணவர்கள் பயன்பெற்றதாக கூறி இரண்டு படங்கள் இடம்பெற்றிருந்தது. அதில் ஒரு படம் வைரலாகும் படத்திலிருக்கும் புர்கா அணிந்த மாணவர்களின் படமாக இருந்தது.
ஆனால் அப்படத்திற்கு அருகில் இருந்த மற்றொரு படத்தில் இருந்த மாணவிகளில் யாரும் புர்கா அணிந்திருக்கவில்லை.
இந்த வீடியோவின் 16 ஆவது விநாடியில் மலபார் சாரிட்டபிள் டிரஸ்ட் மூலமாக கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளிலிக்கும் மாணவிகளுக்கு கல்வி உதவி தரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த உதவியானது கஷ்டப்படும் குடும்பங்களில் நன்றாக படிக்கும் மாணவிகளுக்கு தரப்பட்டதாகவும், சாதி, மதம் பாகுபாடின்றி இந்த உதவியானது தரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து இதுக்குறித்து தேடுகையில் மலபார் கோல்டு நிறுவனத்தில் மேலாளராக பணிபுரியும் கிரிஷ் எஸ். ராய் என்பவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் மங்களூரில் 630 மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கிய நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது. அப்படங்களில் புர்கா அணிந்த மற்றும் அணியாத மாணவிகள் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.
இதனையடுத்து மலபார் சாரிட்டபிள் டிரஸ்டை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அவர்கள், “அத்தகவல் பொய்யானது, சாதி, மத பாகுபாடின்றி நாங்கள் தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவி செய்கின்றோம்” என்று தெரிவித்தனர்.
Also Read: இந்தியா கூட்டணி 304 இடங்களை பெறும் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டதா இந்தியா டுடே?
மலபார் ஜுவல்லரி இஸ்லாமிய மாணவர்களுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை அளித்ததாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
இந்த செய்தியானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது.
Our Sources
YouTube video of Malabar Gold and Diamonds on January 21, 2023
Facebook post by Girish S Rai on January 18, 2023
Telephone Conversation with Malabar Charitable Trust Office
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)