வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025
வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

HomeFact Checkரயில் சக்கரங்களுக்கு நடுவே அமர்ந்து 250 கி.மீ. பயணித்த நபர்; வைரலாகும் தகவல் உண்மையானதா?

ரயில் சக்கரங்களுக்கு நடுவே அமர்ந்து 250 கி.மீ. பயணித்த நபர்; வைரலாகும் தகவல் உண்மையானதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim

ரயில் சக்கரங்களுக்கு நடுவே அமர்ந்து 250 கி.மீ. பயணித்த நபர்.

ரயில் சக்கரங்களுக்கு நடுவே அமர்ந்து 250 கி.மீ. பயணித்த நபர்.

Post Link | Archive Link

Also Read: “திமுக உபி வரான்! பயமா இருக்கு அண்ணா!!” என்று குறிப்பிட்டு விகடன் அட்டைப்படம் வெளியிட்டதா?

Fact

ரயில் சக்கரங்களுக்கு நடுவே அமர்ந்து வாலிபர் ஒருவர் 250 கிலோமீட்டர் தூரம் பயணித்ததாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம்.

இத்தேடலில் வைரலாகும் இத்தகவல் தவறானது என்று ரயில்வே நிர்வாகம் மறுத்ததாக தி இந்து செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

ரயில் சக்கரங்களுக்கு நடுவே அமர்ந்து 250 கி.மீ. பயணித்த நபர்.

இச்செய்தியில் ரயில்வே செய்தித் தொடர்புத்துறையின் நிர்வாக அதிகாரி திலிப்குமார் இத்தகவல் தவறானது என்று மறுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ரயில் நின்றிருந்தபோது அந்த மனிதர் சக்கரத்திற்கு அருகில் ஒளிந்திருந்ததாகவும், ரயில் ஓடிக்கொண்டிருக்கும்போது ரயில் சக்கரத்துடன் அதை சுற்றியுள்ள மற்ற உதிரி பாகங்களும் நகர்வதால் அங்கே ஒளிவது சாத்தியமில்லாதது என்றும் அவர் கூறியதாக இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் பீப்பள்ஸ் சமாச்சார் எனும் இந்தி ஊடகத்தின் எக்ஸ் பக்கத்தில் வைரலாகும் இதே தகவலை பதிவிட்டிருப்பதையும், அத்தகவல் தவறானது என்று மேற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்து பதிவிட்டிருப்பதையும் காண முடிந்தது.

மேற்கு ரயில்வே பதிவிட்ட மறுப்பு பதிவில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் 250 கிலோமீட்டர் அந்நபர் ரயில் சக்கரத்தில் அமர்ந்து பயணித்தார் என்று தவறானது என்றும், ரயிலின் சக்கரமும் அதன் உதிரி பாகங்களும் நகரும்போது யாராலும் அதில் உட்கார முடியாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரயில் சக்கரங்களுக்கு நடுவே அமர்ந்து 250 கி.மீ. பயணித்த நபர்.

Also Read: ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்ததில் தவறில்லை என்றாரா அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி?

Result: Partly False

Sources
Report from The Hindu, Dated December 28, 2024
X post from Western Railway, Dated December 28, 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular