ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkஇந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் என்று பரவும் வதந்தி!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் என்று பரவும் வதந்தி!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்பதாகப் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

இந்தியாவின்
Source: Facebook

முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த வாரம் முதல் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டெங்கு தாக்கம் ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்த மருத்துவர்கள் தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், “இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் காலமானார். உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி காலமானார்” என்கிற வாசகங்களுடன் கூடிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

இந்தியாவின்
Source: Facebook

Facebook Link

இந்தியாவின்
Source: Facebook

Facebook Link

இந்தியாவின்
Source: Facebook

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ருத்ராட்சம் அணிந்து பள்ளிக்கு வந்த இந்து மாணவனை அடித்த கிறிஸ்துவ ஆசிரியர் என்று பரவும் வீடியோ செய்தி உண்மையா?

Fact check/Verification

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான மன்மோகன் சிங் காலமானார் என்பதாகப் பரவும் செய்தி தவறானது என்பதை உறுதியாக வாசகர்களுக்கு எடுத்துரைக்க அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

அப்போது, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உடல்நிலை குறித்த தகவல்களை ஏஎன்ஐ உள்ளிட்ட முன்னணி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது நமக்குக் கிடைத்தது.

Source: Twitter

அதன்படி, மன்மோகன்சிங் உடல்நிலை சீராக உள்ளது; அவர் உடல்நலம் தேறி வருகிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Source: Twitter

மன்மோகன்சிங் உடல்நிலை குறித்த வதந்திகள் பரவிய நிலையில், தெலுங்கானா காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வதந்திகளை நம்ப வேண்டாம்; முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நலமுடன் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளது.

Source: Twitter

Conclusion:

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான மன்மோகன் சிங் காலமானார் என்பதாகப் பரவும் புகைப்படச் செய்தி போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

ANI

TOI

Telangana Congress

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular