Monday, June 23, 2025

Fact Check

ருத்ராட்சம் அணிந்து பள்ளிக்கு வந்த இந்து மாணவனை அடித்த கிறிஸ்துவ ஆசிரியர் என்று பரவும் வீடியோ செய்தி உண்மையா?

banner_image

ருத்ராட்சம் அணிந்து பள்ளிக்கு வந்த இந்து மாணவனை, கிறிஸ்துவ ஆசிரியர் ஒருவர் மிகக்கடுமையாக தாக்கியதாக வீடியோவுடன் கூடிய செய்தி ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

ருத்ராட்சம்
Source: Facebook

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் வீடுகளில் இருந்தே ஆன்லைன் முறையில் கல்வி கற்று வந்தனர். கொரோனா பரவலின் தாக்கம் சற்றே குறையைத் துவங்கியதால் பள்ளிகள் செயல்படத்துவங்கி வருகின்றன.

இந்நிலையில், கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து வந்த காரணத்தினால் அரசு பள்ளி மாணவரை, அப்பள்ளியில் பணிபுரியும் கிறிஸ்துவ ஆசிரியர் சரமாரியாகத் தாக்கியதாக வீடியோ ஒன்று செய்தியுடன் வைரலாகிறது.

Suresh Chavhanke “Sudarshan News” என்கிற டிவிட்டரில் அங்கீகாரம் பெற்றுள்ள ஐடி ஒன்றில் இருந்து இந்த செய்தி ஷேர் செய்யப்பட்டு வருகிறது. சுதர்ஷன் நியூஸ் சேனலின் ஆசிரியர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/SureshChavhanke/status/1449728970157559810?s=20
Source: Twitter

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: உள்ளாட்சி தேர்தலில் ம.நீ.ம கட்சியின் தோல்வி குறித்த செய்திக்கு போலியாக வைரலாகும் நியூஸ் கார்டு!

Fact check/Verification

ருத்ராட்சம் அணிந்த இந்து மாணவனை அடித்த ஆசிரியர் என்று பரவும் நிலைத்தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

அப்போது, குறிப்பிட்ட அந்த வீடியோவிற்கும் வைரலாகும் பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது நமக்கு உறுதியானது.

குறிப்பிட்ட வீடியோ காட்சி நடைபெற்ற பள்ளி சிதம்பரம் அரசு நந்தனார் மேல்நிலைப்பள்ளி ஆகும். அங்கு 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், வகுப்பிற்கு வராமல் வெளியில் சுற்றியதால் அந்த ஆசிரியர் அவரை கடுமையாகத் தாக்கியுள்ளார்.

தாக்கப்பட்ட மாணவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், காயமடைந்த மாணவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்பதாலும், ஆசிரியரால் கடுமையாக தாக்கப்பட்டதாலும் மாணவனைத் தாக்கிய ஆசிரியர் சுப்பிரமணியன் மீது சிறார் வதை சட்டம், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

ருத்ராட்சம்

தொடர்ந்து ருத்ராட்சம் அணிந்து வந்த மாணவன் தாக்கப்பட்டதாக மேற்கூறிய வீடியோவுடன் பரவும் செய்தி நடந்த பள்ளி, கிறிஸ்துவ நிர்வாகத்தினரால் நடத்தப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளியாகும். அப்பள்ளியில் பயிலும் இரண்டு மாணவர்களை ஆசிரியர் ஒருவர் ருத்ராட்சம் அணியக்கூடாது என்று அடித்ததாகவும், பெற்றோரை அழைத்து வரக் கூறியதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பதிலளித்துள்ள முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம், அக்டோபர் 18ம் தேதி இதுகுறித்து விசாரணை நடத்த உள்ளோம் என்று தெரிவித்துள்ளார். இந்து தமிழ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் இச்செய்து வந்துள்ளது. எனினும், முழுமையான விசாரணைக்குப் பிறகே இதுகுறித்த விவரங்கள் தெரிய வரும்.

ருத்ராட்சம்

குறிப்பிட்ட வைரல் பதிவு குறித்து டிவிட்டரில் “அது தவறானது” என்று பதிவிட்டிருந்த செங்கல்பட்டு எஸ்.பி விஜய் குமாரிடம் பேசினோம். அவர், குறிப்பிட்ட பதிவிற்கும், வீடியோவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று நமக்குத் தெரிவித்தார்.

Source: Twitter

தொடர்ந்து, காவல்துறை ஆய்வாளர் ஆறுமுகத்திடம் இதுகுறித்து பேசினோம். “வைரல் வீடியோவின் மூலமாக கைது செய்யப்பட்ட ஆசிரியரின் வழக்கு, டிஎஸ்பி தலைமையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் சாதி, மத ரீதியான பிரச்சினைகள் எதுவும் இல்லை. எனினும், அந்த மாணவனை ஆசிரியர் கடுமையாகத் தாக்கியது தவறான செயல். மேலும், மாணவர் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் எஸ்.சி/எஸ்.டி சட்டப்பிரிவின் கீழ் ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று நமக்கு விளக்கமளித்தார்.

Conclusion:

ருத்ராட்சம் அணிந்த இந்து மாணவனை அடித்த ஆசிரியர் என்று பரவும் வீடியோ செய்திக்கும், அக்குறிப்பிட்ட வீடியோவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False connection

Our Sources

School education Department, TN

Hindu

ANI NEWS

Vijayakumar IPS, Chengalpat

Arumugam, Inspector of police

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

18,712

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage