ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkமதுரை மேயர் பதவிக்கு பாஜக சீட் கொடுக்கவில்லை என்றாரா மாரிதாஸ்?

மதுரை மேயர் பதவிக்கு பாஜக சீட் கொடுக்கவில்லை என்றாரா மாரிதாஸ்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

மதுரை மேயர் பதவிக்கு பாஜக சீட் கொடுக்கவில்லை என்று யூடியூபர் மாரிதாஸ் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.

மதுரை மேயர் பதவிக்கு பாஜக சீட் கொடுக்கவில்லை என்று யூடியூபர் மாரிதாஸ் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

“மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கு நான் போட்டியிட விரும்பினேன். பாஜக தலைவர் அண்ணாமலை எனக்கு சீட் கொடுக்காதது வருத்தமாக இருக்கிறது. பாஜக என்னை அலட்சியம் செய்வதாக உணர்கிறேன்” என்று யூடிபர் மாரிதாஸ் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

மதுரை மேயர் பதவிக்கு பாஜக சீட் கொடுக்கவில்லை என்று யூடியூபர் மாரிதாஸ் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 1

Twitter Link | Archived Link

மதுரை மேயர் பதவிக்கு பாஜக சீட் கொடுக்கவில்லை என்று யூடியூபர் மாரிதாஸ் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 2

Facebook Link

மதுரை மேயர் பதவிக்கு பாஜக சீட் கொடுக்கவில்லை என்று யூடியூபர் மாரிதாஸ் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 3

Facebook Link

Also Read: ஒரு வார்டில் தோற்றாலும் பதவியை ராஜினாமா செய்வேன் என்றாரா வானதி சீனிவாசன்?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification

மதுரை மேயர் பதவிக்கு பாஜக சீட் கொடுக்கவில்லை என்று யூடியூபர் மாரிதாஸ் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.

மதுரை மேயர் பதவிக்கு பாஜக சீட் கொடுக்கவில்லை என்று யூடியூபர் மாரிதாஸ் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

கதிர் நியூஸின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால் இந்த நியூஸ்கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம். இதில் கதிர் நியூஸ் இவ்வாறு  நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த ஒரு தரவும் கிடைக்கவில்லை. 

ஆகவே கதிர் நியூஸின் டிஜிட்டல் துறையினரைத் தொடர்புக்கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்துக் கேட்டோம். அதற்கு அவர்கள்,

“இது முற்றிலும் பொய்யான செய்தி. இந்த நியூஸ்கார்டை நாங்கள் வெளியிடவில்லை.”

என்று பதிலளித்தனர்.

இதனையடுத்து இத்தகவலானது கதிர் நியூஸின் ஊடகப் பக்கங்களிலும் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்று மறுப்பு தெரிவிக்கபட்டது.

Archive Link

இதனையடுத்து பாஜக ஐடி விங் தலைவர் நிர்மல் குமாரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து கேட்டதற்கு, அவரும் இது பொய்யான செய்தி என்பதை உறுதி செய்தார்.

Also Read: ஆடி மாதத்தில் தம்பதிகள் பிரிவதுபோல் அதிமுகவும் பாஜகவும் பிரிந்துள்ளது என்றாரா முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?

Conclusion

மதுரை மேயர் பதவிக்கு பாஜக சீட் கொடுக்கவில்லை என்று யூடியூபர் மாரிதாஸ் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Fabricated

Our Sources

Kathir News

Nirmal Kumar, BJP

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular