ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகள் பிரிவதுபோல் அதிமுகவும் பாஜகவும் தற்காலிகமாக பிரிந்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கடந்த சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் அதிமுகவும் பாஜகவும் ஒன்றாக இணைந்து கூட்டணியாக போட்டியிட்டது. இதனைத் தொடர்ந்து வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தலிலும் இவ்விரு கட்சிகளின் கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக தனித்து போட்டியிடும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இது தற்காலிக பிரிவுதான். ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகளை பிரிப்பது போல காலம் அதிமுகவையும் பாஜகவையும் தற்காலிகமாக பிரித்திருக்கிறது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



Also Read: கூட்டுறவு வங்கிக்கடன் நகைகள் ஏலம் என்று அறிவித்தாரா அமைச்சர் ஐ.பெரியசாமி?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகள் பிரிவதுபோல் அதிமுகவும் பாஜகவும் தற்காலிகமாக பிரிந்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால் இந்த நியூஸ்கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம். இதில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை நம்மால் அறிய முடிந்தது.
“பாஜக தனித்து போட்டியிடுவது அக்கட்சி தலைமை எடுத்த முடிவு” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக தந்தி தொலைக்காட்சி நியூஸ்கார்ட் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
இந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே மேற்கண்ட நியூஸ்கார்ட் போலியாக உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் துறையினரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டோம். அவர்களும் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதுதான் என்பதை உறுதி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் அவர்கள் பாஜக முடிவு குறித்தும், அதிமுகவின் நிலைப்பாடு குறித்தும் சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியிருந்தததை காண முடிந்தது. ஆனால் இச்சந்திப்பில் எந்த ஒரு சந்தர்பத்திலும் வைரலாகும் நியூஸ்கார்டில் இருக்கும் கூற்றை அவர் பேசி இருக்கவே இல்லை.
இந்த சந்திப்பு குறித்து மற்ற ஊடகங்களில் வந்த செய்தியினை இங்கே, இங்கே காணலாம்.
Also Read: ஒரு வார்டில் தோற்றாலும் பதவியை ராஜினாமா செய்வேன் என்றாரா வானதி சீனிவாசன்?
Conclusion
ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகள் பிரிவதுபோல் அதிமுகவும் பாஜகவும் தற்காலிகமாக பிரிந்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் முற்றிலும் பொய்யானதாகும்.
இதனை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)