ஊடகங்களை பகைத்தால் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு ஏற்பட்ட கதிதான் அண்ணாமலைக்கும் ஏற்படும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எச்சரித்ததாக நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஜெயலலிதாவின் நகைகளை முதல்வர் ஸ்டாலின் நியாயமாக மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றாரா அண்ணாமலை?
Fact Check/Verification
ஊடகங்களை பகைத்தால் விஜயகாந்துக்கு ஏற்பட்ட கதிதான் அண்ணாமலைக்கும் ஏற்படும் என்று பேராசிரியர் ஜவாஹிருல்லா எச்சரித்தாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து ஜவாஹிருல்லாவின் உதவியாளரை தொடர்புக் கொண்டு இத்தகவல் குறித்து விசாரித்தோம். அவர் இத்தகவல் பொய்யானது என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து தேடுகையில் ஜவாஹிருல்லாவின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் இத்தகவல் பொய்யானது என்று மறுப்பு தெரிவித்து பதிவு ஒன்று பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
அப்பதிவில், “அன்புமிக்க தே.மு.தி.க. நிறுவனர் சகோதரர் விஜயகாந்த் அவர்கள் குறித்து நியூஸ் 18 உள்ளிட்ட எந்த ஊடகத்திற்கும் எவ்வித பேட்டியும் சமீபத்தில் நான் அளிக்காத நிலையில் சில விஷமிகள் என்னைப் பற்றி சமூக ஊடகங்களில் பொய் பதிவுகளைச் செய்து வருகின்றனர். இந்த குறு மதியாளர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். இவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இத்தகவல் நியூஸ்18 தமிழ்நாடு நியூஸ்கார்டு டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டதா என தேடினோம். இத்தேடலில் அந்நிறுவனம் வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டிருக்கவில்லை.
இதனையடுத்து நியூஸ் 18 தமிழ்நாட்டின் டிஜிட்டல் பொறுப்பாளரை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து விசாரித்தோம். அவர் வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என்று உறுதி செய்தார்.பரப்பப்பட்டு வருவது தெளிவாகின்றது.
Also Read: தமிழ்நாட்டைத் தாண்டி தமிழில் பேசி கட்டணக் கழிப்பறையைக் கூட பயன்படுத்த முடியாது என்றாரா அண்ணாமலை?
Conclusion
ஊடகங்களை பகைத்தால் விஜயகாந்துக்கு ஏற்பட்ட கதிதான் அண்ணாமலைக்கும் ஏற்படும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர். ஜவாஹிருல்லா எச்சரித்தாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். பேராசிரியர் ஜவாஹிருல்லா தரப்பும், நியூஸ் 18 தமிழ்நாடு தரப்பும் இதை உறுதி செய்துள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Facebook Post by Dr.M.H.Jawahirullah, State President, Manithaneya Makkal Katchi, Dated February 18, 2025
Comment from News 18 Tamilnadu’s Digital Incharge