ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkகாலியான வாளியில் இருந்து உணவு பரிமாறிய பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படத்தகவல் உண்மையா?

காலியான வாளியில் இருந்து உணவு பரிமாறிய பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படத்தகவல் உண்மையா?

Authors

Vasudha noticed the growing problem of mis/disinformation online after studying New Media at ACJ in Chennai and became interested in separating facts from fiction. She is interested in learning how global issues affect individuals on a micro level. Before joining Newschecker’s English team, she was working with Latestly.

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Pankaj Menon is a fact-checker based out of Delhi who enjoys ‘digital sleuthing’ and calling out misinformation. He has completed his MA in International Relations from Madras University and has worked with organisations like NDTV, Times Now and Deccan Chronicle online in the past.

Claim: ப்ளேட்டும் காலி பக்கெட், கரண்டியும் காலி சும்மா ஒரு ஃபோட்டோ ஷூட்

Fact: வைரலாகும் புகைப்படத்தகவல் தவறானது. மோடி உண்மையில் உணவு பரிமாறினார்.

காலியான வாளியில் உணவு பரிமாறிய பிரதமர் மோடி என்று புகைப்படத்தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”ப்ளேட்டும் காலி பக்கெட், கரண்டியும் காலி சும்மா ஒரு ஃபோட்டோ ஷூட்” என்று இந்த புகைப்படம் பரவி வருகிறது.

Screenshot from X @SakalaVallavan

X Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: சிறையில் இருந்து வெளிவந்த அரவிந்த் கெஜ்ரிவாலை அடித்த நபர் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check/Verification

காலியான வாளியில் உணவு பரிமாறிய பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படத்தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் சர்ச் மூலமாக தேடியபோது மே 13, 2024 அன்று Aaj Tak வெளியிட்டிருந்த பிரதமர் மோடி குருத்வாராவில் உணவு பரிமாறும் வீடியோ கிடைத்தது.

வைரலாகும் புகைப்படத்தின் கீ-ப்ரேம், குறிப்பிட்ட வீடியோவில் உள்ள காட்சியுடன் ஒத்துப்போனதை நம்மால் அறிய முடிந்தது.

பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்திலும் இந்த வீடியோ இடம்பெற்றிருந்தது.

அதில், பிரதமர் மோடி பக்தர்களுக்கு உணவு பரிமாறுவதைத் தெளிவாக அறிய முடிந்தது. அவர் கைகளில் உள்ள பாத்திரத்திலும் உணவு இருப்பதை நம்மால் காண முடிந்தது.

இதுகுறித்த செய்தியும் NDTV உள்ளிட்ட செய்திகளில் இடம்பெற்றுள்ளது.

Also Read: இந்து கோயிலை இடித்துக் கட்டப்பட்ட தென்காசி மசூதி என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Conclusion

காலியான வாளியில் உணவு பரிமாறிய பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படத்தகவல் தவறானது என்பது  நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
X Post By Aaj Tak, Dated May 13, 2024
YouTube Video By Narendra Modi, Dated May 13, 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Most Popular