Fact Check
நடிகர் அஜித்தை நேரில் அழைத்து கெளரவித்த பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Claim
நடிகர் அஜித்தை நேரில் அழைத்து கெளரவித்த பிரதமர் மோடி
Fact
வைரலாகும் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும்.
நடிகர் அஜித்தை நேரில் அழைத்து கெளரவித்த பிரதமர் மோடி என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”விஷ்வ குருவுடன் தல ” என்று இந்த புகைப்படம் பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இந்திய ராணுவத்தின் நவீனமயமாக்கலுக்கு நன்கொடை வழங்க வங்கிக் கணக்கை தொடங்கியதா மத்திய அரசு?
Fact Check/Verification
நடிகர் அஜித்தை நேரில் அழைத்து கெளரவித்த பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தில் நடிகர் அஜித்தின் முகம் பொருந்தியிருக்கவில்லை. எனவே, அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். அப்போது, கடந்த டிசம்பர் 28, 2024ஆம் ஆண்டு CNBC – TV18யில் “PM Narendra Modi Meets World Chess Champion D Gukesh” என்று வெளியாகியிருந்த செய்தி நமக்குக் கிடைத்தது.
அதில், செஸ் வீரர் குகேஷுடன் பிரதமர் மோடியின் சந்திப்பு புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. வைரலாகும் புகைப்படமும் அந்த புகைப்படமும் ஒன்று என்பதை நம்மால் காண முடிந்தது.
மேலும், பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் கடந்த டிசம்பர் 28, 2024 அன்று இளம் செஸ் வீரர் குகேஷ் மற்றும் அவரது பெற்றோருடன் பிரதமர் மோடி இடம்பெற்றிருக்கும் புகைப்படம் பதிவிடப்பட்டிருந்தது.
அப்புகைப்படமும் அஜித்துடன் பிரதமர் மோடி சந்திப்பு என்று எடிட் செய்யப்பட்டுள்ள புகைப்படமும் ஒன்றே என்பதை நம்மால் அறிய முடிந்தது.


எனவே, நடிகர் அஜித்தை அழைத்து கெளரவப்படுத்திய பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு உறுதியாகியது.
Also Read: பஹல்கம் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 15 பேர் இஸ்லாமியர்கள் என்று பரவும் அட்டவணை உண்மையா?
Conclusion
நடிகர் அஜித்தை நேரில் அழைத்து கெளரவித்த பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X Post From, Narendra Modi, Dated December 28, 2024
YouTube Video From, CNBC-TV18, Dated December 28, 2024