Sunday, March 23, 2025
தமிழ்

Fact Check

RSS அலுவலகத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் எனப்பரவும் வீடியோ தகவல் உண்மையா?

banner_image

Claim: RSS அலுவலகத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத்

Fact: வைரலாகும் தகவல் தவறாகப் பரவுகிறது.

RSS அலுவலகத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”இஸ்ரோ சேர்மன் சோம்நாத் RSS அலுவலகத்தில்” என்று இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Screenshot from X @JaiRam92739628

Archived Link

Screenshot from Facebook/barathittamil

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ஹிஜாப் அணிந்து தேசியக்கொடி ஏற்றிய கர்நாடகா கலெக்டர் எனப்பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Fact Check/Verification

RSS அலுவலகத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் என்று பரவும் வீடியோ தகவல்  குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவை கீ-வேர்ட்கள் மூலமாகத் தேடியபோது அது நம்மை Rashtrotthana Parishat என்னும் பெங்களூருவைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனத்தின் இணையதளப்பக்கத்திற்கு இட்டு சென்றது.

அவர்களது இணையப்பக்கத்தில் ”Rashtrotthana Parishat Felicitates ISRO Chief, Dr. Somnath” என்று இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள காட்சி புகைப்படமாக இடப்பட்டுள்ளது.

சந்திரயான் – 3 திட்டத்தை வழிநடத்துவதற்காக சோம்நாத்திற்கு RSS பொது செயலாளரான தத்தாத்ரேய ஹோசபலே மூலமாக மரியாதை செய்யப்பட்டது என்று இந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “சந்திரயான் – 3 ஏற்கனவே நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்துவிட்டது. ஆகஸ்ட் இறுதியில் அது நிலவில் தரையிறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது” என்று இந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருப்பதன் மூலமாக இது சந்திரயான் – 3 நிலவில் தரையிரங்குவதற்கு முன்னால் நிகழ்ந்த நிகழ்வு என்பதை அறிய முடிகிறது.

Vishwa Samvad Kendra Bharat என்னும் வலதுசாரி ஊடக பக்கத்திலும், “”RSS Sarkaryavah Dattatreya Hosabale Ji congratulated ISRO Chairman Dr. S Somanath Ji, on successfully leading of Chandrayan3 at Rashtrotthana Parishat, Chamarajapete, Bengaluru.” என்கிற தகவலுடன் இந்த வீடியோ இடம்பெற்றுள்ளது.

மேலும், VSK கர்நாடகாவின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் கவுரவிக்கப்பட்டதாகப் பரவும் செய்தி தவறானது; அவர் ராஷ்ட்ரோதன பரிஷத் அலுவலகத்திலேயே மரியாதை செய்யப்பட்டார் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.  

பெங்களூருவைச் சேர்ந்த Rashtrotthana Parishat என்னும் இந்த தனியார் தொண்டு நிறுவனம் பல்வேறு நலத்திட்ட செயல்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விநாயகர் சதுர்த்தி என்று பரவும் கொரோனா காலகட்ட பழைய செய்தி!

Conclusion

RSS அலுவலகத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Website Article from Rashtrothtana Parishat
Twitter Post From, VSK Karnataka, Dated August 26, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,500

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.