Fact Check
ஆம்ஸ்ட்ராங்கிடம் வெறும் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வென்றாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?

Claim: ஆம்ஸ்ட்ராங்கிடம் கொளத்தூரில் வெறும் 3000 வாக்குகள் வித்தியாசத்திலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றி
Fact: வைரலாகும் தகவல் தவறானதாகும். மு.க.ஸ்டாலின் அதிக வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங்கிடம் கொளத்தூரில் வெறும் 3000 வாக்குகள் வித்தியாசத்திலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“சென்ற சட்டமன்றத் தேர்தல் -பெரும் அரசியல் தலைவரின் மகன் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் இல் எந்த அரசியல் பின்புலமும் இல்லாத ஆர்ம்ஸ்ட்ராங் இடம் வெறும் 3000 ஓட்டு வித்தியாசத்தில் மட்டுமே வென்றார். 2026 லும் இதே நிலைமை இருக்குமா? இப்போது புரிகிறதா? படுகொலை பின்னணி?” என்று இந்த தகவல் பரவி வருகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மணிப்பூர் சென்ற ராகுல் காந்தியை விரட்டிய மக்கள் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Fact Check/Verification
ஆம்ஸ்ட்ராங்கிடம் கொளத்தூரில் வெறும் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று பரவும் தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தலில் ஆம்ஸ்ட்ராங் கொளத்தூரில் போட்டியிட்டுள்ளாரா என்று தேடியபோது அவர் அத்தேர்தலில் எங்கும் போட்டியிடவில்லை என்பது தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலமாக உறுதியாகியது. கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஜமால் முகமது மீரா என்பவர் போட்டியிட்டிருந்தார்.

தொடர்ந்து, அவர் கொளத்தூரில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட தேர்தல்கள் குறித்து ஆராய்ந்தபோது கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவர் அங்கு போட்டியிட்டிருப்பது நமக்குத் தெரிய வந்தது.

ஆனால், அத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் 68,677 வாக்குகளுடன் வெற்றியும், அவருக்கு அடுத்த இடத்தில் அஇஅதிமுக சார்பில் போட்டியிட்ட சைதை துரைசாமி 65943 வாக்குகளும் பெற்றிருந்தனர் என்பதும், அத்தேர்தலில் ஆம்ஸ்ட்ராங் 4002 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார் என்பதும் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக நமக்கு உறுதியானது.

எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைந்த பிஎஸ்பி தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிடம் வெறும் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாகப் பரவும் தகவல் போலியானது என்பது உறுதியாகிறது.
Also Read: ஆம்ஸ்ட்ராங் ஒரு குற்றவாளி என்று நியூஸ்கார்ட் வெளியிட்டதா புதியதலைமுறை?
Conclusion
ஆம்ஸ்ட்ராங்கிடம் கொளத்தூரில் வெறும் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று பரவும் தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
elections.tn.gov.in
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)