Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
மமக என்று சுருக்கமாக அழைக்கப்படும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவரான மு.ஹி.ஜவாஹிருல்லா பற்றிய முகப்புக் கட்டுரை ஒன்று, இந்தியா டுடே இதழில் கடந்த 2015ம் ஆண்டு மே 27ம் தேதியன்று வெளியானதாக புகைப்படம் ஒன்று வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் தலைவராக இருப்பவர் பேராசிரியர் மு.ஹி.ஜவாஹிருல்லா. இவர் ஒரு சிறந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளர்.
இந்நிலையில், இவரைப் பற்றிய வதந்தி புகைப்படம் ஒன்று வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளப்பக்கங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
இந்தியா டுடே தமிழ்ப்பதிப்பில், கடந்த 2015ம் ஆண்டு மமக தலைவரான ஜவாஹிருல்லா பற்றிய முகப்புக் கட்டுரை ஒன்று ‘கறை படியாத கரம்’ என்கிற தலைப்பில் வந்துள்ளதாக காட்டுக்கிறது அப்புகைப்படம். இதன் உண்மைத்தன்மை அறியாமல் பலரும் இதனை தற்போது வரை ஷேர் செய்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இப்புகைப்படம் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சாரிபில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
மமக தலைவர் ஜவாஹிருல்லா குறித்து இந்தியா டுடே கட்டுரை வெளியிட்டதாக பரவும் இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆராய்ந்தோம்.
அந்த ஆய்வின் முடிவில், நமக்கு சில சமூக வலைத்தளப்பக்கங்கள் ஆதாரமாகக் கிடைத்தன.
https://www.facebook.com/farook.ali.18062533/posts/408858343604843
https://www.facebook.com/photo/?fbid=443070755866338&set=a.110878325752251
மேலும், இந்தியா டுடே அச்சிதழ் எனப் பரவும் அப்புகைப்படத்தில் உள்ள ஜவாஹிருல்லாவின் உண்மையான புகைப்படமும் நமக்குக் கிடைத்தது. அவற்றை இங்கே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.


மேலும், பரவுகின்ற புகைப்படத்தில் பதிப்பு தேதி மே 27, 2015ம் ஆண்டு என்று உள்ளது. உண்மையில், பிப்ரவரி மாதமே இந்தியா டுடே தனது தமிழ், மலையாளம் உள்ளிட்ட சில மொழிகளில் பிரதிகளை வெளியிடுவதை நிறுத்திக் கொண்டுவிட்டது. அதனைச் சில முன்னணி ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டுள்ளன. அந்த இணையப்பக்கங்களையும் இங்கே இணைத்துள்ளோம்.
அதேன்போன்று, தற்போது வலம் வருகின்ற இந்தப் போலி புகைப்படம் கடந்த 2015ம் ஆண்டே இதே போன்று சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுள்ளது.
அப்போது ஜவாஹிருல்லா அவர்களே இதற்கான மறுப்பினைத் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது தொடர்பான லிங்க்கையும் இங்கே இணைத்துள்ளோம்.
https://www.facebook.com/JawahirullahMH/posts/441803116001099
இதன்மூலம், நமக்குத் தெளிவாகத் தெரிய வருவது என்னவென்றால், ஜவாஹிருல்லா குறித்து இந்தியா டுடே வெளியிட்டதாக பரவும் புகைப்படம் சித்தரிக்கப்பட்டதாகும்.
மமக தலைவர் ஜவாஹிருல்லா குறித்து இந்தியா டுடே முகப்புக் கட்டுரை வெளியிட்டதாக பரவும் புகைப்படம் முழுவதும் சித்தரிக்கப்பட்டது; 2015ம் ஆண்டு முதலே இந்த வதந்திப் புகைப்படம் சமூக ஊடகங்களில் சுற்றி வருகிறது என்பதை நியூஸ் செக்கர் தமிழ் சார்பில் ஆதாரத்துடன் எடுத்துக் காட்டியுள்ளோம். எனவே, இந்த புகைப்படத்தை வாசகர்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
FB pages: https://www.facebook.com/JawahirullahMH/posts/441803116001099
https://www.facebook.com/farook.ali.18062533/posts/408858343604843
https://www.facebook.com/photo/?fbid=443070755866338&set=a.110878325752251
The News Minute: https://www.thenewsminute.com/article/india-today-close-print-editions-magazine-three-south-indian-languages-27511
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
November 11, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 19, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 11, 2025