வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024

HomeFact Checkஉள்ளாட்சி தேர்தலில் ம.நீ.ம கட்சியின் தோல்வி குறித்த செய்திக்கு போலியாக வைரலாகும் நியூஸ் கார்டு!

உள்ளாட்சி தேர்தலில் ம.நீ.ம கட்சியின் தோல்வி குறித்த செய்திக்கு போலியாக வைரலாகும் நியூஸ் கார்டு!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வி என்கிற செய்திக்கு சன் நியூஸ், கமல்ஹாசனை கேலி செய்யும் வகையிலான புகைப்படத்தைப் பயன்படுத்தியதாக நியூஸ் கார்டு வைரலாகிறது.

உள்ளாட்சி
Source: Facebook

தமிழ்நாட்டில் நடந்து முடித்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திமுக கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெரும்பான்மையாக வெற்றி பெற்றுள்ளனர்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியடைந்துள்ளனர்.

இந்நிலையில், “உள்ளாட்சி தேர்தலில் மநீம படுதோல்வி. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் படுதோல்வி. ஒரு ஒன்றிய வார்டை கூட பெற இயலவில்லை. போட்டியிட்ட பெரும்பான்மையான இடங்களில் டெப்பாசிட் இழந்த வேட்பாளர்கள்” என்கிற செய்திக்கு சன் நியூஸ் தொலைக்காட்சி மநீம கட்சித்தலைவர் கமல்ஹாசனை கேலி செய்யும் வகையில் அவரது திரைப்பட போஸ் ஒன்றினைப் பயன்படுத்தியதாக நியூஸ் கார்டு வைரலாகிறது.

உள்ளாட்சி
Source: Facebook

Facebook Link

உள்ளாட்சி
Source: Facebook

Facebook Link

உள்ளாட்சி
Source: Facebook

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அதிமுகவிற்கு இது வரலாறு காணாத தோல்விதான் என்றாரா அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்?

Fact check/Verification

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வி என்கிற செய்திக்கு சன் நியூஸ் தொலைக்காட்சி கமல்ஹாசனின் சினிமா சார்ந்த புகைப்படத்தை பயன்படுத்தியதாக பரவும் நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

குறிப்பிட்ட நியூஸ் கார்டு குறித்து சன் நியூஸ் டிஜிட்டல் ஹெட் மனோஜ் கார்த்திக்கை தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர், “குறிப்பிட்ட வைரல் நியூஸ் கார்டில் உள்ள செய்தி உண்மையானது. ஆனால், அதற்கு நாங்கள் பயன்படுத்திய புகைப்படம் கமல்ஹாசனின் மற்றொரு புகைப்படம் ஆகும். வைரலாகும் நியூஸ் கார்டில் உள்ள அவரது புகைப்படம் எடிட் செய்யப்பட்டு பரப்பப்படுகிறது” என்று விளக்கமளித்தார்.

குறிப்பிட்ட வைரல் நியூஸ் கார்டின், ஒரிஜினல் நியூஸ் கார்டினை இங்கே உங்கள் பார்வைக்காக இணைத்துள்ளோம்.

Conclusion:

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வி என்கிற செய்திக்கு சன் நியூஸ் தொலைக்காட்சி கமல்ஹாசனின் சினிமா சார்ந்த புகைப்படத்தை பயன்படுத்தியதாக பரவும் நியூஸ் கார்டு போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Sun News Digital Head Manoj

Facebook

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular