வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024

HomeFact Checkஅதிமுகவிற்கு இது வரலாறு காணாத தோல்விதான் என்றாரா அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்?

அதிமுகவிற்கு இது வரலாறு காணாத தோல்விதான் என்றாரா அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

அதிமுகவிற்கு இது வரலாறு காணாத தோல்விதான் என்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பேசியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. இதனை சுரேஷ் என்கிற ட்விட்டர் பயனாளர் தனது பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.

அதிமுகவிற்கு
Source: Twitter

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்காக நடைபெற்று வாக்கு எண்ணிக்கை நேற்று முடிவடைந்த நிலையில் மாநிலத்தில் ஆளும் திமுக கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் நூற்றுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். உள்ளாட்சி தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் திமுக கட்சி பெரும்பான்மையுடன் வென்றுள்ளது.

EC Link

இந்நிலையில், “இது வரலாறு காணாத தோல்விதான். மக்களும் தொண்டர்களும் அதிமுகவிடத்திலே ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்று புரிந்துகொள்கிறேன்.” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று வைரலாகிறது.

அதிமுகவிற்கு
Source: Twitter

Twitter Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு தமிழ்நாட்டில் இந்த ரேஷன் கட்டுப்பாடுகளை அறிவித்ததா?

Fact check/Verification

அதிமுகவிற்கு இது வரலாறு காணாத தோல்விதான் என்று ஓபிஎஸ் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த செய்திகளை ஆராய்ந்தோம்.

ஆனால், ஓபிஎஸ் இவ்வாறு கூறியதாக எந்த செய்தியும் வெளியாகவில்லை. எனவே, புதியதலைமுறை டிஜிட்டல் பிரிவு ஆசிரியர் சரவணனிடம் இதுகுறித்து கேட்டோம். அப்போது அவர், புதியதலைமுறை பெயரில் பரவுகின்ற அந்த நியூஸ் கார்டு மற்றும் செய்தி போலியானது என்பதை நமக்கு உறுதி செய்தார்.

Conclusion:

அதிமுகவிற்கு இது வரலாறு காணாத தோல்விதான் என்று ஓபிஎஸ் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Puthiyathalaimurai Digital Head Saravanan

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular