தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற உதயநிதியைப் பிடித்து மக்கள் தொங்குவது நியாயம் இல்லை என்று திமுக அமைச்சர் துரைமுருகன் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று வைரலாகிறது.

தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பாக ஈடுபட்டுள்ள தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
அங்கு கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “ஆட்சி செய்வதை விட, என் முதலமைச்சர் பதவியை விட மக்களின் உயிரைக் காப்பாற்றுவதுதான் முக்கியம் என்று தளபதி ஸ்டாலின் கூறினார்” என்பதாக பேசியிருந்தார்.
இந்நிலையில், “அமைச்சர் துரைமுருகன் சர்ச்சை கருத்து. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போகிற போது மக்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஆட்சியை பிடித்த பிறகு வாக்குறுதிகளை நிறைவேற்ற சொல்லி உதயநிதியை பிடித்து மக்கள் தொங்குவது நியாயம் இல்லை” என்று பேசியதாக நியூஸ் கார்டு ஒன்று வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தமிழ்நாடு பாஜக அலுவலகத்தின் மீது குண்டு வீசச் சொன்னதே அண்ணாமலைதான் என்றாரா கருக்கா வினோத்?
Fact Check/Verification
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற உதயநிதியைப் பிடித்து மக்கள் தொங்குவது நியாயம் இல்லை என்று துரைமுருகன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட நியூஸ்கார்டு, தந்தி டிவி வெளியிட்டதாக பரவினாலும் வைர கார்டில் எழுத்துப்பிழைகள் இருந்தன. மேலும், தந்தி டிவியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்திலும் அதுபோன்ற நியூஸ் கார்டு எதுவும் வெளியாகவில்லை.
எனவே, தந்தி டிவியின் இணை ஆசிரியர் அசோக வர்ஷினியை இது குறித்து தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது, அவர் குறிப்பிட்ட நியூஸ் கார்டு தந்தி டிவியுடையது அல்ல. அது போலியானது என்று விளக்கமளித்தார்.
வைரலாகும் செய்தி குறித்த உண்மையறிய வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சர் துரைமுருகனின் மகனுமான எம்.பி கதிர் ஆனந்தை தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர், குறிப்பிட்ட செய்தி போலியாக பரப்பப்படுகிறது என்று தெரிவித்தார்.
Conclusion
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற உதயநிதியைப் பிடித்து மக்கள் தொங்குவது நியாயம் இல்லை என்று துரைமுருகன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources
D.M.Kathir Anand MP
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)