Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
கர்நாடகாவில் முகக்கவசம் அணியாததற்கு அபராதம் விதித்ததால் போலீசாரை பொதுமக்கள் தாக்கியதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை காரணமாக மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை நாம் சந்தித்து வருகின்றோம். கொரானா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, முகக்கவசம் அணியாததற்கு அபராதம் என பல முன்னெடுப்புகளை அரசு எடுத்து வருகின்றது.
இதனிடையே சமீபத்தில் கர்நாடகாவில் முகக்கவசம் அணியாததற்கு அபராதம் விதித்ததால் போலீசாரை பொதுமக்கள் ஒன்று கூடி தாக்கியதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Archive Link: https://archive.ph/HtzkS

Archive Link: https://archive.ph/jVyWU

Archive Link: https://archive.ph/dmROo
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இவ்வீடியோவின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய அவ்வீடியோ குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
முகக்கவசம் அணியாததற்கு அபராதம் விதித்ததால் போலீசாரை பொதுமக்கள் தாக்கியதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இவ்வீடியோக் குறித்து ஆய்வு செய்தோம்.
இந்த ஆய்வில் வைரலாகும் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து நம்மால் அறிய முடிந்தது. உண்மையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் வன்முறை சம்பவம், போலீசார் முகக்கவசம் அணியாததற்கு அபராதம் விதித்ததால் ஏற்பட்டதல்ல.
கர்நாடக மாநிலம் மைசூரில் அதிக வேகத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த பொறியாளர் ஒருவரை டிராஃபிக் போலீசார் தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர். போலீசாரைக் கண்ட பொறியாளர் அவர்களிடம் பிடி கொடுக்க விரும்பாமல் அதிக வேகத்தில் அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்றுள்ளார்.
இதில் அவருடைய மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதால், அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தைக் கண்ட பொதுமக்கள் கொதிப்படைந்து போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இச்சம்வத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவே முகக்கவசம் அணியாததற்கு அபராதம் விதித்ததால் போலீசார் தாக்கப்பட்டதாகக் கூறி தற்போது வைரலாகி வருகின்றது.
மைசூரில் நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்த செய்தி India Ahead News என்ற ஊடகத்தில் வெளிவந்திருந்தது.

வைரலாகும் வீடியோ மேலே குறிப்பிடப்பட்டுள்ள சம்பவத்தின்போது எடுக்கப்பட்டதுதான் என்பதை உறுதி செய்ய, வைரலாகும் வீடியோவையும் India Ahead News-ல் வந்த வீடியோவையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இச்சம்பவம் குறித்து மேலும் சில ஊடகங்களிலும் செய்தி வந்தது. அவற்றை இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
கர்நாடகாவில் முகக்கவசம் அணியாததற்கு அபராதம் விதித்ததால் போலீசாரை பொதுமக்கள் தாக்கியதாக கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோ தவறானது என்பதையும், அவ்வீடியோ போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்ற பொறியாளர் ஒருவர் உயிரிழந்ததால், அதன்பின் ஏற்பட்ட கலவரத்தின்போது எடுக்கப்பட்டதென்பதையும் உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
India Ahead News: https://www.youtube.com/watch?v=0xiMiGgZSSI&t=121s
City Today: https://citytoday.news/traffic-cops-attacked-as-motorist-dies-in-accident/
The News Minute: https://www.thenewsminute.com/article/video-mob-mysuru-attacks-traffic-cop-after-motorist-dies-accident-145757
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Gayathri Jayachandran
May 14, 2020
Vijayalakshmi Balasubramaniyan
April 7, 2021
Vijayalakshmi Balasubramaniyan
April 24, 2021