Fact Check
பிரதமர் மோடி வாடிகனில் வாடகை காரில் பயணம் செய்ததாக வதந்தி!
பிரதமர் மோடி வாடிகனில் வாடகை காரில் பயணம் செய்ததாக கூறி புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


பிரதமர் மோடி இத்தாலியில் நடந்த ஜி-20 மாநாட்டில் கலந்துக் கொள்ள இத்தாலி சென்றபோது, வாடிகன் நகரில் போப் பிரான்சிஸை சந்தித்து உரையாடினார்.
இந்த சந்திப்புக்காக பிரதமரை அழைத்து வரும்போது வாடகை காரில் அழைத்து வரப்பட்டதாக கூறி புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



Also Read: அண்ணாமலை பாஜகவினரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக வதந்தி!
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
பிரதமர் மோடி வாடிகனில் வாடகை காரில் பயணம் செய்ததாக கூறி பரப்பப்படும் புகைப்படங்களின் பின்னணியில் இருந்த உண்மைத்தன்மை குறித்து அறிய அப்புகைப்படங்களை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். இதில் அப்புகைப்படங்கள் எடிட் செய்யப்பட்டவை என்பதை நம்மால் அறிய முடிந்தது.
பிரதமர் மோடி வாடிகன் பயணம் குறித்து, ANI அதன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் சிலவற்றை பதிவிட்டிருந்தது. இந்த புகைப்படங்களை எடிட் செய்தே மேற்கண்ட தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது.
வாசகர்களின் புரிதலுக்காக எடிட் செய்யப்பட்டு வைரலாகும் படங்களையும், உண்மையான படங்களையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


Also Read: நரிக்குறவர்களை கோயிலில் அனுமதித்ததற்கு, அமைச்சர் சேகர் பாபுவுக்கு கண்டனம் தெரிவித்தாரா எச்.ராஜா?
Conclusion
பிரதமர் மோடி வாடிகனில் வாடகை காரில் பயணம் செய்ததாக கூறி சமூக வலைத்தளங்களில் வைரலாகும் படங்கள் எடிட் செய்யப்பட்டவை என்பதனை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Image
Our Sources
ANI
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)