ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkமிஸ்டர் பீன் நடிகர் ரோவன் அட்கின்சன் நோயுற்று படுத்த படுக்கையாய் இருப்பதாகப் பரவும் புகைப்படம் உண்மையா?

மிஸ்டர் பீன் நடிகர் ரோவன் அட்கின்சன் நோயுற்று படுத்த படுக்கையாய் இருப்பதாகப் பரவும் புகைப்படம் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: படுத்த படுக்கையாய் இருக்கும் மிஸ்டர் பீன் நடிகர்

Fact: வைரலாகும் புகைப்படத்தில் இருப்பவர் மற்றொரு நபர் ஆவார்.

மிஸ்டர் பீன் நடிகர் ரோவன் அட்கின்சன் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருப்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”யாருக்கெல்லாம் நம்ம Mr.Bean பிடிக்கும். இளமை அது போனா…அது திரும்பாது….இருக்கும் வரை நம்மை சுற்றி இருப்பவர்களையும் நாமும் சந்தோஷமாக வாழ்ந்து விட்டு செல்ல வேண்டும்…எல்லோருக்கும் ஒரு காலம் முதுமை வரும்.” என்று இப்புகைப்படம் பரவுகிறது.

மிஸ்டர் பீன்
Screenshot from Facebook/VikkiTimes

Facebook Link/Archived Link

Screenshot from Facebook/tamil2entertainment

Facebook Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ஆம்ஸ்ட்ராங்கிடம் வெறும் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வென்றாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?

Fact Check/Verification

மிஸ்டர் பீன் நடிகர் ரோவன் அட்கின்சன் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருப்பதாகப் பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படம் குறித்த உண்மையறிய ஆராய்ந்தபோது ரோவன் அட்கின்சன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஃபார்முலா ஒன் கார்பந்தய நிகழ்வில் அவரிடம் எடுக்கப்பட்ட பேட்டி செய்திகளில் வெளியாகியுள்ளது நமக்குக் கிடைத்தது.  Behind Grand prix மற்றும் zero racing உள்ளிட்ட யூடியூப் பக்கங்களில் அவருடைய பேட்டி இடம்பெற்றுள்ளது.

மேலும், வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த ஜனவரி 30, 2020 அன்று manchestereveningnews வெளியிட்டிருந்த செய்தி நமக்குக் கிடைத்தது. அதில், “The ‘haunting’ image of a man whose medical needs were deemed insufficient for free care. He died weighing 45kg. His widow has one question – ‘how ill do you have to be?’” என்று தற்போது பரவும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

அதன்படி, முறையான மருத்துவ உதவி கிடைக்காத காரணத்தினால் Barry என்கிற வயதான நபர் 45 கிலோ எடையில் உயிரிழந்ததாக இந்த செய்தி இடம்பெற்றுள்ளது. அவருடைய புகைப்படத்தை எடுத்தே அதில் ரோவன் அட்கின்சன் புகைப்படத்தை எடிட் செய்துள்ளனர் என்பது உறுதியாகியது.

  Also Read: பெரியார் பற்றி பேசிய பயாஸ் ஹூசைனுடன் அண்ணாமலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Conclusion

மிஸ்டர் பீன் நடிகர் ரோவன் அட்கின்சன் நோயால் படுத்த படுக்கையாக இருப்பதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image

Our Sources
YouTube Video from, Zero Racing, Dated July 07, 2024
Report From, manchestereveningnews, Dated January 30, 2020


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular