சனிக்கிழமை, நவம்பர் 16, 2024
சனிக்கிழமை, நவம்பர் 16, 2024

HomeFact Checkமசாஜ் செய்யும்போது தலையை திருப்பியதால் இளைஞர் மரணம்; வைரலாகும் வீடியோ உண்மையானதா?  

மசாஜ் செய்யும்போது தலையை திருப்பியதால் இளைஞர் மரணம்; வைரலாகும் வீடியோ உண்மையானதா?  

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: மசாஜ் செய்யும்போது தலையை திருப்பியதால் இளைஞர் மரணம்.

Fact: வைரலாகும் வீடியோ ஒரு புனைவு வீடியோவாகும்.

“சலூன் கடையில் கழுத்து நெட்டி எடுக்க வேண்டாம்… கவனம் எச்சரிக்கை பதிவு.. இறந்து விட்டார்.. தலைக்கு மசாஜ் செய்யும்போது கடைசியில் கழுத்தை திருப்பி நெட்டி எடுக்கும் தருணம் நிலைகுலைந்து இறந்துவிடார்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இவ்வீடியோவில் சலூன் கடை ஒன்றில் இளைஞர் ஒருவர் தலைக்கு மசாஜ் செய்யும்போது, அந்த சலூன் தொழிலாளி அந்த இளைஞரின் தலையை பிடித்து திருப்புகின்றார். இவ்வாறு செய்யும்போது அந்த இளைஞரின் கழுத்து பிடித்துக்கொள்கிறது. சிறிது நேரத்தில் அந்த இளைஞர் சுயநினைவிழந்து சரிகின்றார். இதன்பின் அந்த கடை தொழிலாளி பயந்து கடையை விட்டு தப்பியோடுகின்றார்.   

சமூக வலைத்தளங்களில் பலரும் இவ்வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

மசாஜ் செய்யும்போது தலையை திருப்பியதால் இளைஞர் மரணம்.

X Link | Archive Link

மசாஜ் செய்யும்போது தலையை திருப்பியதால் இளைஞர் மரணம்.

Archive Link

மசாஜ் செய்யும்போது தலையை திருப்பியதால் இளைஞர் மரணம்.

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ராகுல் காந்தியை தேசத்துரோகி என்றாரா டிரம்ப்?

Fact Check/Verification

சலூன் கடையில் மசாஜ் செய்யும்போது தலையை திருப்பியதால் இளைஞர் மரணித்ததாக பரப்பப்படும் வீடியோவின் இறுதியில், அவ்வீடியோவானது விழிப்புணர்வுக்காக உருவாக்கப்பட்டது என்றும், அதில் காணப்பட்டவர்கள் நடிகர்கள் என்றும் தெளிவுப்படுத்தி இருந்ததை காண முடிந்தது.

மசாஜ் செய்யும்போது தலையை திருப்பியதால் இளைஞர் மரணம்.

இதனையடுத்து வைரலாகும் வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, வைரலாகும் வீடியோ குறித்து தேடினோம். இத்தேடலில் கன்னட நடிகை சஞ்சனா கல்ரானி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வைரலாகும் இதே வீடியோவை நவம்பர் 07, 2024 அன்று பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.

சஞ்சனா கல்ரானி பகிர்ந்திருந்த இவ்வீடியோவில் இது ஒரு சித்தரிக்கப்பட்ட வீடியோ என்பதை அவர் தெளிவுப்படுத்தி இருப்பதையும் காண முடிந்தது. 

மசாஜ் செய்யும்போது தலையை திருப்பியதால் இளைஞர் மரணம்.

சஞ்சனா கல்ரானி இதுபோன்று விழிப்புணர்வு வீடியோக்களை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றார்.

மசாஜ் செய்யும்போது தலையை திருப்பியதால் இளைஞர் மரணம்.

சஞ்சனா கல்ராணி பகிர்ந்திருந்த வீடியோக்களை வைத்து ஏற்கனவே பொய் செய்தி பரப்பப்பட்ட நிலையில், அவை குறித்து நியூஸ்செக்கர் தரப்பிலிருந்து ஆய்வு செய்து அதன் உண்மை நிலை குறித்து விளக்கியுள்ளோம்.

  1. இந்து பெண்ணுக்கு புர்கா தந்து மானத்தை காப்பாற்றிய இஸ்லாமியப் பெண்; வைரலாகும் வீடியோ உண்மையானதா?
  2. கோவையில் சுகாதாரமற்று பானி பூரி விற்கப்பட்டதாக பரவும் புனைவு வீடியோ!

Also Read: மின்கம்பத்தை நடுவில் வைத்து கால்வாய் கட்டப்பட்டதாக பரவும் படம் தமிழகத்தில் எடுக்கப்பட்டதா?

Conclusion

சலூன் கடையில் மசாஜ் செய்யும்போது தலையை திருப்பியதால் இளைஞர் மரணித்ததாக பரப்பப்படும் வீடியோ சித்தரிக்கப்பட்ட ஒரு புனைவு வீடியோவாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Facebook post from Actress Sanjjanaa Galrani, Dated November 07, 2024

உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular