வியாழக்கிழமை, டிசம்பர் 19, 2024
வியாழக்கிழமை, டிசம்பர் 19, 2024

HomeFact Checkகேரளாவில் இந்துவை முஸ்லீம் நபர் கொன்றதாக பரவும் தவறான வீடியோ!

கேரளாவில் இந்துவை முஸ்லீம் நபர் கொன்றதாக பரவும் தவறான வீடியோ!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: கேரளாவில் இந்துவை முஸ்லீம் நபர் கொன்றதாக பரவும் வீடியோ.

Fact: இத்தகவல் தவறானதாகும். இச்சம்பவம்  2011 ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்ததாகும். இந்த முஸ்லீம் நபர் மனநிலை சரியில்லாதவராவார்.

”இப்படியே ஜிகாதிகள் ஹிந்துக்களை கொன்று கேரளாவில் விபத்து போல காட்சியளிக்கிறார்கள்… சிசிடிவி இல்லை என்றால் அதற்கு எதிராக ஆதாரம் கிடைத்திருக்காது…” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி
வருகின்றது.

கேரளாவில் இந்துவை முஸ்லீம் நபர் கொன்றதாக பரவும் வீடியோ.

X Link | Archive Link

கேரளாவில் இந்துவை முஸ்லீம் நபர் கொன்றதாக பரவும் வீடியோ.

Archive Link

கேரளாவில் இந்துவை முஸ்லீம் நபர் கொன்றதாக பரவும் வீடியோ.

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: திருப்பதி லட்டு விவகாரம் குறித்து பேசியதால் பியூஷ் மனுஷ் மீது தாக்குதல் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Fact Check/Verification

கேரளாவில் இந்துவை முஸ்லீம் நபர் கொன்றதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம்.

இத்தேடலில் Accident prevention 1st எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் பிப்ரவரி 26, 2021 அன்று இவ்வீடியோ பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அப்பதிவில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் இலங்கையில் கண்டியில் உள்ள கலஹா பகுதியில் நடந்தது என்று  குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்த முஸ்லீம் நபர் மனநிலை சரியில்லாதவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

கேரளாவில் இந்துவை முஸ்லீம் நபர் கொன்றதாக பரவும் வீடியோ.

இதனையடுத்து நியூஸ்செக்கரின் இலங்கை பிரிவை சார்ந்த ரிஃப்தி அலி கலஹா பகுதி காவல் நிலையத்தை தொடர்புக் கொண்டு விசாரித்ததில் வைரலாகும் சம்பவம் 2021 ஆம் ஆண்டில் இலங்கையின் கலஹா பகுதியில் நடந்தது என்பதும், வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர் மனநிலை சரியில்லாதவர் என்பதும் உறுதியானது.

 Also Read: அட்லாண்டிக் பெருங்கடலில் இரண்டு கப்பல்கள் திமிங்கலத்தால் உடைக்கப்பட்டதா?

Conclusion

கேரளாவில் இந்துவை முஸ்லீம் நபர் கொன்றதாக பரவும் வீடியோ தவறானதாகும். உண்மையில் இச்சம்பமானது 2021 ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்ததாகும். வன்முறையில் ஈடுபட்ட அந்த இஸ்லாமியர் மனநிலை சரியில்லாதவராகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Sources
Facebook post from the user, Accident prevention 1st, Dated February 26, 2021
Input from Rifti Ali, Newschecker, Srilanka

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular