ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkஇஸ்லாமிய எம்.எல்.ஏ போலீசாரை தாக்கியதாக பரவும் தவறான வீடியோத் தகவல்!

இஸ்லாமிய எம்.எல்.ஏ போலீசாரை தாக்கியதாக பரவும் தவறான வீடியோத் தகவல்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: இஸ்லாமிய எம்.எல்.ஏ போலீசாரை தாக்கியதாக பரவும் வீடியோத் தகவல்!

Fact: வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வு 2018ல் நடந்த பழைய சம்பவமாகும். அவ்வீடியோவில் காணப்படுபவர் இஸ்லாமியர் அல்ல; இந்து மதத்தவர் ஆவார். அவர் பெயர் மணீஷ் சௌத்ரி என்பதாகும். இவர் பாஜகவின் கவுன்சிலராக இருந்தவராவார்.

“எம்.எல்.ஏ மன்சூர் முகமது திமிரைப் பாருங்கள். போலீஸின் நிலைமையே இப்படி இருக்கும் போது, பொதுமக்களின் கதி என்னவாகும்” என்று குறிப்பிட்டு வீடியோஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இஸ்லாமிய எம்.எல்.ஏ போலீசாரை தாக்கியதாக சமூக ஊடகங்களில் பரவும் வீடியோத்தகவல்

X Link | Archived Link

இஸ்லாமிய எம்.எல்.ஏ போலீசாரை தாக்கியதாக சமூக ஊடகங்களில் பரவும் வீடியோத்தகவல்

Archived Link

இஸ்லாமிய எம்.எல்.ஏ போலீசாரை தாக்கியதாக சமூக ஊடகங்களில் பரவும் வீடியோத்தகவல்

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: விஜயகாந்த் படத்திற்கு விஜய் மரியாதை செலுத்தியதாக பரவும் எடிட் படம்!

Fact Check/Verification

இஸ்லாமிய எம்.எல்.ஏ போலீசாரை தாக்கியதாக கூறி வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.

இத்தேடலில் ANI UP/Uttarakhandன் எக்ஸ் தளப் பக்கத்தில் வைரலாகும் இவ்வீடியோ குறித்து அக்டோபர் 20, 2018 அன்று செய்தி வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

வைரலாகும் வீடியோவில் காணப்படும் போலீஸ் அதிகாரி தனது வழக்கறிஞர் தோழியுடன் உணவகம் சென்றதாகவும், அங்கு உணவு பரிமாறுபவருடன் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த உணவகத்தின் முதலாளியும், பாஜக கவுன்சிலருமான மனீஷ் என்பவர் அவரை தாக்கியதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அந்த பாஜக கவுன்சிலர் கைது செய்யப்பட்டதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் இச்சம்பவம் குறித்து மேலும் சில ஊடகங்களிலும் செய்தி வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. அவற்றை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம். அனைத்து செய்திகளிலும் தாக்குதலில் ஈடுபட்ட நபரின் பெயர் மணீஷ் சௌத்ரி என்றும், அவர் பாஜக கவுன்சிலர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து தேடுகையில் மணீஷ் சௌத்ரி 2021 ஏப்ரலில் தலையில் குண்டடிப்பட்டு இறந்ததாக ஊடகங்களில் செய்தி வந்திருப்பதை காண முடிந்தது. அவற்றை இங்கே மற்றும் இங்கே காணலாம்.

இதனடிப்படையில் பார்க்கையில் 2021 ஆம் ஆண்டிலேயே இறந்த இந்து நபருக்கு இஸ்லாமிய சாயம் பூசி பொய்யான தகவலை சமூக வலைத்தளங்களில் விஷமிகள் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகின்றது.

 Also Read: பாஜக ஆட்சிக்கு வந்தால் சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படாது என்றாரா அண்ணாமலை?

Conclusion

இஸ்லாமிய எம்.எல்.ஏ போலீசாரை தாக்கியதாக சமூக ஊடகங்களில் பரவும் வீடியோத்தகவல் முற்றிலும் பொய்யானதாகும். வைரலாகும் வீடியோவில் காணப்படுபவர் இஸ்லாமியர் அல்ல; இந்து மதத்தவர் ஆவார். அவர் பெயர் மணீஷ் சௌத்ரி என்பதாகும். இவர் பாஜகவின் கவுன்சிலராக இருந்தவராவார். இவர் தற்போது உயிருடனே இல்லை.

இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடம் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Report from ANI UP/Uttarakhand, Dated October 20, 2018
Report from India Today, Dated October 20, 2018
Report from Times Now, Dated October 20, 2018
Report from The Hindu, Dated October 20, 2018
Report from Times of India, Dated April 16, 2021
Report from Indian Express, Dated April 16, 2021

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular