ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkவிஜயகாந்த் படத்திற்கு விஜய் மரியாதை செலுத்தியதாக பரவும் எடிட் படம்!

விஜயகாந்த் படத்திற்கு விஜய் மரியாதை செலுத்தியதாக பரவும் எடிட் படம்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: விஜயகாந்த் படத்திற்கு விஜய் மரியாதை.

Fact: வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு நடிகரும், தேசிய முன்னேற்ற கழகத்தின் தலைவருமான விஜய் மரியாதை செலுத்தியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

விஜயகாந்த் படத்திற்கு விஜய் மரியாதை செலுத்தியதாக வைரலாகும் படம்

X Link | Archived Link

விஜயகாந்த் படத்திற்கு விஜய் மரியாதை செலுத்தியதாக வைரலாகும் படம்

Facebook Link

விஜயகாந்த் படத்திற்கு விஜய் மரியாதை செலுத்தியதாக வைரலாகும் படம்

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பாஜக ஆட்சிக்கு வந்தால் சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படாது என்றாரா அண்ணாமலை?

Fact Check/Verification

விஜயகாந்த் படத்திற்கு விஜய் மரியாதை செலுத்தியதாக வைரலாகும் படத்தை உற்று நோக்குகையில் அப்படமானது எடிட் செய்யப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை காண முடிந்தது. ஆகவே அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து ஆய்வு செய்தோம்.

அதில் திமுக பொது செயலாளர் கனிமொழி தன் தாயார் ராசாத்தி அம்மாளுடன் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று, அவர் படத்திற்கு மரியாதை செலுத்திய படம் ஒன்றை அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்ததை நம்மால் கண்டறிய முடிந்தது.

இப்படத்தில் ராசாத்தி அம்மாள் அணிந்துள்ள இளம்பச்சை நிற புடவையும், அவரின் நெற்றி பகுதியும் வைரலாகும் படத்தில் இடம்பெற்றிருப்பதை நம்மால் காண முடிந்தது.

விஜயகாந்த் படத்திற்கு விஜய் மரியாதை செலுத்தியதாக வைரலாகும் படம்

வாசகர்களின் புரிதலுக்காக உண்மையானப் படத்தையும் எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

விஜயகாந்த் படத்திற்கு விஜய் மரியாதை செலுத்தியதாக வைரலாகும் படம்

இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டது என்பது தெளிவாகின்றது. இதனையடுத்து இப்படத்தில் காணப்படும் விஜய் படம் எப்போது எடுக்கப்பட்டது என தேடினோம்.

இத்தேடலில் அப்படமானது கடந்த டிசம்பர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கு விஜய் நிவாரண உதவிகளை தரும்போது எடுக்கப்பட்டது என எஸ்எஸ் மியூஸிக்கின் எக்ஸ் தளப் பதிவின் வாயிலாக அறிய முடிந்தது

விஜயகாந்த் படத்திற்கு விஜய் மரியாதை செலுத்தியதாக வைரலாகும் படம்

 Also Read: பஞ்சாபில் போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் மூதாட்டி ஒருவர் கோபப்பட்டதாக பரவும் பழைய வீடியோ!

Conclusion

விஜயகாந்த் படத்திற்கு விஜய் மரியாதை செலுத்தியதாக வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Tweet from Kanimozhi karunanidhi, Dated Jan 30, 2024
Tweet from SS Music, Dated Dec 30, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular