Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: திருச்சி பெல் கம்பெனியில் வடிவமைக்கப்பட்டு நாமக்கல் விஸ்வகர்மா தொழிலாளால் மெருகேற்றப்பட்ட மணிகள்
Fact: வைரலாகும் வீடியோவில் இடம்பெற்றுள்ள மணிகள் முழுக்க முழுக்க நாமக்கல் தனியார் தொழிற்சாலையில் தயாரானவை ஆகும்.
அயோத்தி ராமர் கோயிலுக்கு திருச்சி BHEL நிறுவனம் மணிகளை தயாரித்து அனுப்பியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“ஜெய் ஶ்ரீராம்..அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலுக்குச் செல்லும் ரெண்டரை டன் எடை ஆலய மணிகள் நாமக்கல் ஶ்ரீ ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்து பூஜைகள் செய்து அயோத்திக்கு புறப்பட்டது. திருச்சி பெல் கம்பெனியில் வடிவமைக்கப்பட்டு நாமக்கல் விஸ்வகர்மா தொழிலாளால் மெருகேற்றப்பட்டது.” என்று இந்த வீடியோ பரவுகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அயோத்தி ராமர் கோவில் என்று பரவும் தவறான வீடியோ!
அயோத்தி ராமர் கோயிலுக்கு திருச்சி BHEL நிறுவனம் மணிகளை தயாரித்து அனுப்பியதாகப் பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது “Tamil Nadu To Ayodhya | Amid Chants Of ‘Jai Shri Ram,’ 42 Temple Bells Embark On Ram Mandir Journey” என்கிற தலைப்பில் வைரல் வீடியோவின் காட்சிகள் Mojo Story என்னும் யூடியூப் பக்கத்தில் இடம்பெற்றிருந்தது.
குறிப்பிட்ட வீடியோவில் இடம்பெற்றிருப்பது நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் என்பதை அறிந்துகொண்ட நாம் இதுதொடர்பாக மேலும் தேடினோம். அப்போது, “Namakkal’s Artisans Craft 48 Bells Ahead Of Ram Mandir Inauguration In Ayodhya” என்று News 18 வெளியிட்டிருந்த செய்தி நமக்குக் கிடைத்தது. அதன்படி, அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் இந்த மணிகள் ஆண்டாள் மோல்டிங் வொர்க்ஸ் என்னும் நாமக்கல் மோகனூர் ரோடில் அமைந்துள்ள கடையில் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ETV பாரத் இதுகுறித்து வெளியிட்டுள்ள யூடியூப் செய்தி தொகுப்பில் ஆண்டாள் மோல்டிங் வொர்க்ஸ் உரிமையாளர் காளிதாஸின் பேட்டியும் இடம்பெற்றுள்ளது. எனவே, வைரலாகும் வீடியோவில் உள்ள மணிகள் நாமக்கல்லில் தயாரிக்கப்பட்டவை; அவற்றிற்கும் திருச்சி BHEL நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதியாகிறது.
கடந்த 2013ஆம் ஆண்டு ”BHEL has made about 700 wheels for temple chariots in Tamil Nadu in over 45 years” என்று அவர்களுடைய கோயில்களுக்கான தேர் சக்கரத்தயாரிப்பு குறித்த செய்தி தவிர அயோத்திக்கு அவர்கள் சார்பில் மணிகள் தயாரிக்கப்பட்டதாக எந்த செய்தியும் சமீபத்தில் வெளியாகியிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read: அயோத்தி ராமர் கோயில் கட்டுமான குழுவினருடன் உணவருந்தும் பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?
அயோத்தி ராமர் கோயிலுக்கு திருச்சி BHEL நிறுவனம் மணிகளை தயாரித்து அனுப்பியதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Report from News 18, Dated December 20, 2023
YouTube Video From, Mojo Story, Dated December 25, 2023
YouTube Video from ETV Bharath, Dated December 14, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
March 7, 2024
Vijayalakshmi Balasubramaniyan
February 13, 2024
Vijayalakshmi Balasubramaniyan
January 23, 2024