சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkபாஜகவை எதிர்ப்பது அதிமுகவுக்கு நல்லதல்ல என்றாரா நாராயணன் திருப்பதி?

பாஜகவை எதிர்ப்பது அதிமுகவுக்கு நல்லதல்ல என்றாரா நாராயணன் திருப்பதி?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: பாஜகவை எதிர்ப்பது அதிமுக எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று நாராயணன் திருப்பதி கூறினார்.

Fact: நாராயன் திருப்பதி இதை மறுத்துள்ளார்.

“பாஜகவை பகைப்பது எடப்பாடி மற்றும் அதிமுகவின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. தமிழக அரசியல் இனி பாஜக-திமுக என்று தான் இருக்கும். பாஜக தலைமையில்தான் தேர்தல் கூட்டணியும் தொகுதி பங்கீடும். தற்போதைய நிலையில் அதிமுகவுக்கு 10 சீட்டே அதிகம். அரசியலில் இருந்து அதிமுக ஓய்வு பெறுவதே சரியாக இருக்கும்” என்று பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கூறியதாகநியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

பாஜகவை எதிர்ப்பது அதிமுக எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று நாராயணன் திருப்பதி கூறியதாக பரவும் தகவல்.
Screenshot from Twitter@KavinSolaimalai

Twitter Link | Archived Link

பாஜகவை எதிர்ப்பது அதிமுக எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று நாராயணன் திருப்பதி கூறியதாக பரவும் தகவல்.
Screenshot from Facebook/Poopathi Poopathi

Archived Link

பாஜகவை எதிர்ப்பது அதிமுக எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று நாராயணன் திருப்பதி கூறியதாக பரவும் தகவல்.
Screenshot from Facebook/Vadachennai Parthiban

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பத்திரிக்கையாளர்களுக்கு பயந்து ஓடிய பாஜக அமைச்சர் மீனாட்சி லேகியின் நடனம் என்று பரவும் பொய் வீடியோ!

Fact Check/Verification

பாஜகவை எதிர்ப்பது அதிமுக எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று நாராயணன் திருப்பதி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

வைரலாகும் நியூஸ்கார்டானது புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை அந்நிறுவனம் வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட குறித்து விசாரித்ததில், அந்த நியூஸ்கார்ட் போலியானது என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து தேடுகையில் நாராயணன் திருப்பதியும் இத்தகவல் பொய்யானது என்று அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.

இதனைடிப்படையில் காண்கையில் வைரலாகும் இத்தகவல் தவறானது என்பது தெளிவாகின்றது.

Also Read: யானைக்கு இறைச்சி தந்த முஸ்லீம் நபரை யானை தாக்கியதா?

Conclusion

பாஜகவை எதிர்ப்பது அதிமுக எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று நாராயணன் திருப்பதி கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Tweet from Narayanan Thirupathy, Dated June 12, 2023

Phone Conversation with Ivany, Digital Head, Puthiya Thalaimurai, Dated June 12, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular