சசிகலாவின் முன்னாள் கணவர் நடராஜனுக்கு ஞானசேகரனுடன் தொடர்பு என்று நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கு உதவியதாக திமுக நிர்வாகி சண்முகம் மற்றும் விளம்பர பிரியர் அமைச்சர் பெயர் அடிபட்ட நிலையில் அந்த பட்டியலில் புதிதாக இணைந்துள்ளார் பல்கலை. மக்கள் தொடர்பு அதிகாரி நடராஜன் சண்முகம், ஞானசேகர் மட்டுமில்லாமல் திமுகவில் பலருடன் நடராஜன் நெருக்கம் எனக் கூறப்படும் நிலையில் வழக்கில் தொடர்புடைய உண்மை சார்கள் சிக்குவார்களா என மக்கள் எதிர்பார்ப்பு” என்று இந்த நியூஸ்கார்ட் பரவுகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: திமுக ஆட்சியில் சமீபத்தில் நடைபெற்ற சாதிய வன்கொடுமை என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Fact Check/Verification
சசிகலாவின் முன்னாள் கணவர் நடராஜனுக்கு ஞானசேகரனுடன் தொடர்பு என்று பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
சசிகலாவின் முன்னாள் கணவர் நடராஜனுடன் தொடர்புபடுத்தி இந்த நியூஸ்கார்ட் பரவும் நிலையில் அவர் கடந்த 2018ஆம் ஆண்டே காலமானது குறிப்பிடத்தக்கது.
மேலும், வைரலாகும் நியூஸ்கார்ட் நியூஸ் J தொலைக்காட்சி வெளியிட்டதாகப் பரவும் நிலையில், “பரவும் நியூஸ்கார்ட் போலியானது” என்று விளக்கமளித்துள்ளனர்.
Also Read: செப்டம்பர் 1 முதல் 500 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்மில் கிடைக்காது என்றதா ரிசர்வ் வங்கி?
Conclusion
சசிகலாவின் முன்னாள் கணவர் நடராஜனுக்கு ஞானசேகரனுடன் தொடர்பு என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video By One India, Dated March 20, 2018
Facebook Post By, News J, Dated June 10, 2025