Fact Check
நீட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று தற்போது கூறினாரா நளினி சிதம்பரம்?
நீட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று நளினி சிதம்பரம் கூறியதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் வகையிலான சட்ட மசோதா தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், “நீட் விவகாரத்தில் தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். கிராமப்புற மாணவர்களுக்காக நீட் தேர்வில் இருந்து விலக்கு எனக் கூறுவது ஏமாற்று வேலை” என்று காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும், வழக்கறிஞருமான நளினி சிதம்பரம் கூறியிருப்பதாக நியூஸ் கார்டு ஒன்று வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification:
நீட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று நளினி சிதம்பரம் கூறியதாகப் பரவும் செய்தி தற்போதைய ஒன்றா என்று அறிய முன்னணி செய்தித்தளங்களில் ஆய்வு செய்தோம்.
ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் சமீபத்தில் வெளியாகவில்லை. தொடர்ந்து, குறிப்பிட்ட நியூஸ் கார்டு, தந்தி டிவியுடைய வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டது போன்று இருந்ததால் அதனை ரிவர்ஸ் சர்ச்க்கு உள்ளாக்கியபோது 2017 ஆம் ஆண்டு அவர் இவ்வாறு பேசியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. 2017 ஆம் ஆண்டு அதிமுக அரசு கொண்டு வந்த அவசர சட்டம் குறித்து இவ்வாறு பேட்டியளித்திருந்தார் நளினி சிதம்பரம்.
Conclusion:
நீட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று நளினி சிதம்பரம் கூறியதாகப் பரவும் புகைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளியான பழைய செய்தி என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading
Our Sources:
Thanthi Tv: https://www.youtube.com/watch?v=GECArxGSaQA&feature=emb_logo
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)