சனிக்கிழமை, ஜூன் 15, 2024
சனிக்கிழமை, ஜூன் 15, 2024

HomeFact CheckNewsட்ரோன் பாய் பிரதாப்புக்கு DRDO-வில் விஞ்ஞானிப் பணித் தரப்பட்டுள்ளதா?

ட்ரோன் பாய் பிரதாப்புக்கு DRDO-வில் விஞ்ஞானிப் பணித் தரப்பட்டுள்ளதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

வந்தச் செய்தி:

(A Story of #Prathap who has been appointed as a scientist in DRDO recently.)

சமீபத்தில் டிஆர்டிஓ-வில் விஞ்ஞானியாக பணியமர்த்தப்பட்டுள்ள பிரதாப்பின் கதை.

Source: Facebook

சரிப்பார்ப்பு:

இந்திய அளவில் ட்ரோன் பாய் என அழைக்கப்படும் பிரதாப் பற்றி சமூக வலைத்தளங்களில் பரப்பரப்பாக பல செய்திகள் வந்ததை நீங்கள் பார்த்திருக்கலாம். இவரின் சாதனை வரலாறு குறித்து பலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.  தற்போது, அந்த இளைஞரை பிரதமர் மோடி பாராட்டியதோடு அவருக்கு DRDO-வில் பணியாற்ற வாய்ப்பு அளித்து உள்ளார் என்கிற செய்தி பரப்பரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

உண்மைத் தன்மை:

நாம் பிரதாப் குறித்துத் தேடியபோது பல நல்ல விஷயங்கள் கிடைத்தது. அவரை ஒரு ஹீரோவாக சித்தரித்து தமிழகத்தின் பிரபல பத்திரிக்கைகளான தினமலர், விகடன் போன்றவைகளும் கூட கட்டுரைகள் வெளியிட்டிருந்தன. அவரின் குடும்பச் சூழல், அவர் கண்ட தோல்விகள், அதிலிருந்து மீள அவர் செய்த முயற்சிகள், அவர் கலந்துக் கொண்டப் போட்டிகள், அவரைப் பணியமர்த்த உலக நாடுகளின் அழைப்புகள் என பல விஷயங்களை நம்மால் காண முடிந்தது.

பிரதாப் DRDO (Defence Research and Development Organisation)-ல் விஞ்ஞானியாக பணியாற்றுகிறார் எனக் கூறும் தகவல் குறித்து ஆராய்ந்து பார்க்கையில் அதுத் தொடர்பான அதிகாரப்பூர்வத் தகவல் ஏதும் வெளியாகவில்லை.

பிரதாப் பிரதமர் பரிந்துரையின்படி DRDO-வில் பணியாற்றுவதாக கூறும் தகவலைக் குறித்து விசாரிக்கையில், இன்றுவரை பிரதமரோ அல்லது பிரதமர் அலுவலத்தில் இருந்தோ எந்தவொரு அழைப்பும் தனக்கு வரவில்லை என்று பிரதாப் தரப்பிலிருந்து பதில் கிடைத்துள்ளது.

ட்ரோன் பாய் பிரதாப் ட்ரோனுடன் காட்சியளிக்கும் புகைப்படம்…

முடிவு

நம்முடைய தேடலில் ட்ரோன் பாய் பிரதாப் அவர்களுக்கு  பிரதமர்  DRDO-வில் இணைந்து பணியாற்ற வாய்ப்பளித்துள்ளார் என்று பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்று நிரூபணமாகியுள்ளது.

Result: False

Source:

  • Facebook
  • Google Search

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular