மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி என்பதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பிரான்ஸில் சாலையில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் அகற்றப்பட்டனரா? உண்மை என்ன?
Fact Check/Verification
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மதுரையில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி என்று பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய இதுகுறித்து ஆய்வு செய்தோம்.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்த ஒன்றிய அரசு, கடந்த ஜனவரி, 2019 ஆம் அதற்கான அடிக்கல்லை நாட்டியது. ஆனால், இன்றுவரை அப்பணி முடியடையவில்லை.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடல்நலக்குறைவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது. கட்டியே முடிக்கப்படாத மருத்துவமனையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்செய்தி தெரிவிக்கிறது. மேலும், அதிலுள்ள மதுரை என்கிற வார்த்தை அளவில் சற்று பெரியதாக அமைந்துள்ளது.
எனவே, அதன் உண்மைத்தன்மையை ஆராய, குறிப்பிட்ட நியூஸ்கார்ட் செய்தி புதியதலைமுறை பெயரில் பரவுவதால், அவர்களுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் இதுபோன்ற நியூஸ்கார்ட் வெளியாகியுள்ளதா என்று பார்த்தோம்.
அப்போது, “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்கிற அவர்களது உண்மையான நியூஸ்கார்ட் நமக்குக் கிடைத்தது.
இந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்த நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


மேலும், இச்செய்தியின் தொடர்ச்சியாக, “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளதாக தகவல். வயிற்றில் ஏற்பட்ட சிறிய தொற்று காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நிர்மலா சீதாராமன் அனுமதிக்கப்பட்டார்” என்கிற செய்தியையும் டிசம்பர் 27 அன்று வெளியிட்டுள்ளது புதிய தலைமுறை.
குறிப்பிட்ட நியூஸ்கார்டினை சிலர் கேலியாக பகிர்ந்தாலும், பலரும் உண்மை என்று நம்பியே பகிர்ந்து வருகின்றனர். வைரலாகும் மதுரை எய்ம்ஸில் நிர்மலா சீதாராமன் அனுமதி என்கிற நியூஸ்கார்ட் போலியானது; எடிட் செய்யப்பட்டது என்பதை புதியதலைமுறை டிஜிட்டல் பிரிவிலும் உறுதி செய்து கொண்டோம்.
Also Read: எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை அழித்தனரா சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள்?
Conclusion
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மதுரையில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி என்று பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Photo
Source
Facebook Post, From Puthiyathalaimurai, On December 26, 2022
Facebook Post, From Puthiyathalaimurai, Dated December 27, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)