ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkதமிழ்நாட்டில் அசைவம் படைக்கப்படும் குலதெய்வ கோயில்களை திறக்க இன்று தடை என்றாரா நிர்மலா சீதாராமன்?

தமிழ்நாட்டில் அசைவம் படைக்கப்படும் குலதெய்வ கோயில்களை திறக்க இன்று தடை என்றாரா நிர்மலா சீதாராமன்?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: தமிழ்நாட்டில் ராமர் கோயில் குடமுழுக்கு தினத்தன்று அசைவம் படைக்கும் குலதெய்வ கோயில்களை திறக்கத் தடை – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் தினமலர் வெளியிட்டதாக போலியாக பரவி வருகிறது.

தமிழ்நாட்டில் ராமர் கோயில் குடமுழுக்கு தினத்தன்று அசைவம் படைக்கும் குலதெய்வ கோயில்களை திறக்கத் தடை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று பரவுகிறது.

தமிழ்நாட்டில்
Screenshot from X @Jokerphoenix14

Archived Link

Screenshot from Facebook/iraniyan

Facebook Link

Screenshot from Facebook/Mariyappan

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அயோத்தி ராமர் கோவில் என்று பரவும் தவறான வீடியோ!

Fact Check/Verification

  தமிழ்நாட்டில் ராமர் கோயில் குடமுழுக்கு தினத்தன்று அசைவம் படைக்கும் குலதெய்வ கோயில்களை திறக்கத் தடை என்று நிர்மலா சீதாராமன் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் நியூஸ்கார்ட் தினமலர் பெயரில் பரவிய நிலையில் இதுகுறித்து தினமலர் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த தண்டபாணியைத் தொடர்பு கொண்டு கேட்டோம். அப்போது அவர், “இந்த நியூஸ்கார்ட் போலியானது; இப்படி எந்த செய்தியையும் நாங்கள் வெளியிடவில்லை” என்று விளக்கமளித்தார்.

Also Read: அயோத்தி ராமர் கோயிலுக்கு நேபாளத்தில் இருந்து சீர்வரிசை என்று பரவும் நொய்டா வீடியோ!

Conclusion

தமிழ்நாட்டில் ராமர் கோயில் குடமுழுக்கு தினத்தன்று அசைவம் படைக்கும் குலதெய்வ கோயில்களை திறக்கத் தடை என்று நிர்மலா சீதாராமன் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources:
Phone Conversation with, Dhandapani, Dinamalar, Dated January 22, 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular