Fact Check
கேஸ் சிலிண்டர் விலையுயர்வு குறித்து நிர்மலா சீதாராமன் சர்சைக்குரிய கருத்தைக் கூறியதாக வதந்தி

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், கேஸ் சிலிண்டர் விலையுயர்வு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைக் கூறியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Fact Check/ Verification
நிர்மலா சீதாராமன் அவர்கள், “கேஸ் சிலிண்டர் கட்டணம் செலுத்த முடியாதவர்கள் விறகு அடுப்பில் சமைக்க பழகிக் கொள்ள வேண்டும்” என்று கூறியதாக புதியத் தலைமுறையின் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இதனைப் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, அதை சார்ந்து தங்கள் கருத்துகளையும் பதிவு செய்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த புகைப்படச் செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் இச்செய்திக் குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்
கேஸ் சிலிண்டர் கட்டணம் குறித்து நிர்மலா சீதாராமன் அவர்கள் இவ்வாறு பேசினாரா என்பதை அறிய, புதிய தலைமுறை விடுத்து வேறு ஊடகங்களில் இந்தச் செய்தி வந்ததா என்பதை முதலில் ஆராய்ந்தோம்.
ஆனால் நம் தேடலில் நிர்மலா சீதாராமன் அவர்கள் கேஸ் சிலிண்டர் குறித்து இவ்வாறு பேசியதாக எந்த ஒரு செய்தியும் எந்த ஒரு ஊடகத்திலும் வந்திருக்கவில்லை என்பதை நம்மால் அறிய முடிந்தது.
இதன்பின் ஆய்வின் அடுத்தக் கட்டமாக, இவ்வாறு ஒரு புகைப்படச் செய்தி உண்மையிலேயே புதிய தலைமுறையில் வெளிவந்துள்ளதா என்பதை அறிய, புதிய தலைமுறையின் சமூக வலைத்தளங்களில் இச்செய்திக் குறித்து தேடினோம்.
ஆனால் நம் தேடலில் இவ்வாறு ஒரு புகைப்படச் செய்தி புதிய தலைமுறையில் வந்ததற்கான எந்த ஆதாரமும் நமக்கு கிடைக்கவில்லை.
ஒருவேளை சமூக வலைத்தளங்களில் பரவும் இந்த புகைப்படச் செய்தி எடிட் செய்யப்பட்டதாக இருக்குமோ என்ற சந்தேகம் நமக்கு ஏற்பட்டது.
நமது சந்தேகத்தைத் தெளிவுப்படுத்திக் கொள்ள புதிய தலைமுறைத் தரப்பை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் தொடர்புக் கொண்டோம்.
புதிய தலைமுறைத் தரப்பில்,
“கேஸ் சிலிண்டர் கட்டணம் குறித்து நிர்மலா சீதாராமன் அவர்கள் பேசியதாக பரப்பப்படும் புகைப்படச் செய்தி பொய்யானது”
என உறுதி செய்யப்பட்டது.
Conclusion
“கேஸ் சிலிண்டர் கட்டணம் செலுத்த முடியாதவர்கள் விறகு அடுப்பில் சமைக்க பழகிக் கொள்ள வேண்டும்” என்று நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படச் செய்தி பொய்யானது என்பதை ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Facebook Profile: https://www.facebook.com/manias.acsmani/posts/2775932049350679
Facebook Profile: https://www.facebook.com/thameemkodai/posts/10157972637317737
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)