ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி ஒன்றிய அரசை விமர்சித்தாரா?

ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி ஒன்றிய அரசை விமர்சித்தாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி ஒன்றிய அரசை விமர்சித்ததாக பரவும் வீடியோ.

Fact: நிதின் கட்கரி பேசியதில் ஒரு குறிப்பிட்டபகுதியை மட்டும் வைத்து இந்த தவறான தகவல் பரப்பப்படுகின்றது.

“இன்று கிராமங்கள், ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியற்றவர்களாக உள்ளனர். கிராமங்களில் நல்ல சாலைகள் இல்லை, குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர் இல்லை, நல்ல மருத்துவமனைகள் இல்லை, நல்ல பள்ளிகள் இல்லை” என்று பாஜக தலைமையிலான ஒன்றிய அரசை ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி விமர்சித்ததாக கூறி தமிழ்நாடு காங்கிரஸ் அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி ஒன்றிய அரசை விமர்சித்ததாக பரவும் தகவல்

X Link | Archive Link

இந்த வீடியோவை பலரும் அவர்கள்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி ஒன்றிய அரசை விமர்சித்ததாக பரவும் தகவல்

Archive Link

ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி ஒன்றிய அரசை விமர்சித்ததாக பரவும் தகவல்

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு காரணமானவர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டாரா?

Fact Check/Verification

ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி ஒன்றிய அரசை விமர்சித்ததாக பரவும் வீடியோவில் ‘தி லால்லன்டாப்’ எனும் லோகோ இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது. இதை அடிப்படையாக வைத்து தேடுகையில் லால்லன்டாப் யூடியூப் பக்கத்தில் தேடியதில் பிப்ரவரி 29, 2024 அன்று வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிதின் கட்கரியின் நேர்காணலின் முழுப்பகுதி இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

இந்த நேர்காணலின் கூர்மையாக கவனித்து பார்க்கையில் அவர் பேசியதில் பாதி பகுதியை மட்டும் வைரலாகும் இத்தகவல் பரப்பப்பட்டு வருகின்றது என அறிய முடிந்தது.

இவ்வீடியோவின் 18 ஆவது நிமிடத்தில், “…காந்தி இருந்த போது இந்தியாவின் 90 சதவீதம் மக்கள் கிராமங்களிலேயே வசித்தனர்… ஆனால் அதன்பின் 30 சதவீதம் மக்கள் கிராமங்களிலிருந்து வெளியேறி விட்டனர். இதற்கு என்ன காரணம்?… இதற்கு காரணம் என்னவென்றால் இன்றைய கிராமங்களில் வாழும் ஏழை தொழிலாளிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை. இதற்கு காரணம் கிராமங்கள், விவசாய நிலங்கள், மற்றும் மலைவாழ் மக்கள் வாழும் இடங்களின் பொருளாதார நிலை. அங்கு வாழும் மக்களுக்கு குடிக்க சுத்தமான நீர் இல்லை, நல்ல மருத்துவமனை இல்லை, நல்ல பள்ளிகள் இல்லை, விவசாயிகளுக்கு அவர்களின் பயிர்களுக்கு சரியான விலை கிடைப்பதில்லை. இதை சரிசெய்ய சரியான வளர்ச்சிகள் வேண்டும். எங்களுடைய அரசு இதற்காக நிறைய உழைத்துக் கொண்டிருக்கின்றது…” என்று நிதின் கட்கரி பேசி இருந்ததை காண முடிந்தது.

இதனடிப்படையில் பார்க்கையில் நிதின் கட்கரி பேசிய கருத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை எடிட் செய்து தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் வைரலாகும் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது என அறிய முடிகின்றது.

தொடர்ந்து தேடுகையில் நிதின் கட்கரியின் எக்ஸ் பக்கத்தில் வைரலாகும் இத்தகவல் தவறானது என்று மறுப்பு தெரிவித்திருந்ததை காண முடிந்தது.

தொடர்ந்து இத்தகவலை பரப்பியவர்களுக்கு எதிராக நிதின் கட்கரி வழக்கு தொடர்ந்ததாக ஊடகங்களில் வந்த செய்தியின் வாயிலாக அறிய முடிந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.

இதனையடுத்து தேடுகையில் PIB Fact Checkகின் எக்ஸ் பக்கத்திலும் இத்தகவல் தவறானது என்று பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

Also Read: பிரதமர் மோடியை விமர்சித்ததால் சுட்டுக்கொல்லப்பட்ட மணிப்பூர் சிறுமி என்று பரவும் மியான்மர் வீடியோ!

Conclusion

ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி ஒன்றிய அரசை விமர்சித்ததாக பரவும் வீடியோவானது தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை  எடிட் செய்து உருவாக்கப்பட்டதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

இந்த செய்தியானது ஏற்கனவே நியூஸ்செக்கர் இந்தியில் வெளியிடப்பட்டுள்ளது. அச்செய்தியை இங்கே காணலாம்.

Result: Missing Context

Our Sources
YouTube Video from The Lallantop, Dated Feb 29, 2024
Tweet from Office Of Nitin Gadkari, Dated March 01, 2024
Tweet from PIB Fact Check, Dated March 01, 2024
Report from The Indian Express, Dated March 02, 2024
Report from The Economic Times, Dated March 02, 2024
Report from The Times of India, Dated March 03, 2024


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular