Fact Check
சிக்கந்தர் தர்காவில் சமீபத்தில் கூடிய கூட்டம் என்பதாகப் பரவும் புகைப்படம் உண்மையா?
Claim
சிக்கந்தர் தர்காவில் சமீபத்தில் கூடிய கூட்டம்
Fact
வைரலாகும் புகைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.
சிக்கந்தர் தர்காவில் சமீபத்தில் கூடிய கூட்டம் என்பதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
” சிக்கந்தர் தர்காவுக்கு மார்க்கெட்டிங் செய்து இலவச விளம்பரம் கொடுத்த சங்கிகளுக்கு நன்றி” என்று இந்த புகைப்படம் பரவுகிறது.


சமூக வலைத்தளங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தீர்த்தவாரி நிகழ்ச்சி செய்யக்கூடாது என்று தடுத்த காவலரை கோவில் யானை தூக்கி எறிந்ததா?
Fact Check/Verification
சிக்கந்தர் தர்காவில் சமீபத்தில் கூடிய கூட்டம் என்பதாகப் பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது ”சிக்கந்தர் பாதுஷா சந்தனக்கூடு” என்று வெளியாகியிருந்த வலைப்பூ பதிவு ஒன்றில் கடந்த மார்ச் 04, 2021 அன்று இந்த புகைப்படம் இடம்பெற்றிருந்தது. மேலும், அப்புகைப்படத்தில் பசுமை நடை என்கிற வாசகங்கள் இடம்பெற்றிருப்பதை நம்மால் காண முடிந்தது.

இதே பதிவில், கடந்த பிப்ரவரி 25, 2014 அன்று ”திருப்பரங்குன்றமும் சிக்கந்தர் தர்ஹாவும்” என்று இடம்பெற்றுள்ள பதிவில் இந்த பசுமை நடை நிகழ்வுடன் தொடர்புடைய மற்ற சில புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

மேலும், வேல்முருகன் என்பவரது வலைப்பூவில் “திருப்பரங்குன்றம் மலைமீது உள்ள சிக்கந்தர் தர்ஹா பயணம்” என்கிற தலைப்பில் கடந்த பிப்ரவரி 21, 2014 அன்று வெளியாகியுள்ள கட்டுரையில் திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்ஹா பசுமை நடை நிகழ்வு குறித்த பல்வேறு புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் இடம்பெற்றுள்ள புகைப்படம் ஒன்றின் காட்சிகளும், வைரல் புகைப்படக் காட்சிகளும் ஒன்றே என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிந்தது.


எனவே, கடந்த 2014ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா பகுதியில் நடைபெற்ற பசுமை நடை நிகழ்வுடன் தொடர்புடைய புகைப்படமே தற்போதைய மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்துடன் இணைத்து பரப்பப்பட்டு வருகிறது. சர்ச்சைக்குரிய இந்த நிகழ்வுக்கு பிறகு சிக்கந்தர் தர்காவில் கூடிய கூட்டம் என்பதாக இந்த புகைப்படம் பரவுகிறது என்பது நமக்கு உறுதியாகியது.
Also Read: திமுக அரசு கோவிலை இடித்ததாக பரவும் வீடியோவின் உண்மை என்ன?
Conclusion
சிக்கந்தர் தர்காவில் சமீபத்தில் கூடிய கூட்டம் என்பதாகப் பரவும் புகைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Blog Post from, maduraivaasagan, Dated March 04, 2021
Blog Post from, maduraivaasagan, Dated February 25, 2014
Post from, vel63, Dated February 21, 2014