Fact Check
சென்னையில் குருக்களின் மீது பூணூல் அறுத்து தாக்குதல் என்று பரவும் பழைய செய்தி!
Claim
சென்னையில் குருக்களின் மீது பூணூல் அறுத்து தாக்குதல்
Fact
வைரலாகும் செய்தி கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவமாகும்.
சென்னையில் குருக்களின் மீது பூணூல் அறுத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“சென்னை மயிலாப்பூரில் பஜார் ரோட்டில் காரணீஸ்வரர் எனும் ஒரு கோயில் உள்ளது, அந்த கோயிலின் குருக்கள் பெயர் சண்முக குருக்கள்……..வர் நேற்று மாலை கோவிலுக்கு சென்று கொண்டிருந்த போது சுமார் 6- 6.30 மணி அளவில்….தி.க-வினைச் சேர்ந்த சுமார் 20 நபர்கள் பைக்கில் வந்து அவருடைய பூணூலினை அறுத்து எறிந்துவிட்டு, அவரை அடித்து கீழே தள்ளிவிட்டுச் சென்றுவிட்டனர்” என்பதாக மேலும் தகவலுடன் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் பரவுகிறது.

@Umagarghi262


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தமிழன் உயிரை கொடுத்தாவது தனி தமிழ்நாடு உருவாக்குவான் என்று ஆ.ராசா பேசினாரா?
Fact Check/Verification
சென்னையில் குருக்களின் மீது பூணூல் அறுத்து தாக்குதல் என்று பரவும் செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் பதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த ஏப்ரல் 22, 2015 அன்று “சாலையில் நடந்து சென்ற முதியவர்கள் 2 பேரை தாக்கி பூணூல் அறுப்பு: 6 பேர் கைது” என்று இந்து தமிழ்திசை செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த சம்பவம் குறித்து மேலும் ஆராய்ந்தபோது, “கடந்த ஏப்ரல் 20, 2015 அன்று இரவு சென்னை மைலாப்பூரில் வசித்து வந்த விஸ்வநாத குருக்கள் என்பவரை மோட்டார் சைக்கிளில் வந்த சில நபர்கள் தாக்கி அவரது பூணூலை அறுத்ததாகத் தெரிகிறது.
மேலும், மேற்கு மாம்பலத்தில் வசித்து வந்த சந்தான கோபாலன் என்ற முதியவரும் தாக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக 6 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்பதாக BBC தமிழிலும் ஏப்ரல் 21, 2015ல் செய்தி வெளியாகியிருந்தது.

இந்த செய்தியே தற்போது நடைபெற்றதாகப் பரவி வருகிறது.
Also Read: தவெக தலைவர் விஜய் கையை தோள் மீதிருந்து தூக்கியெறிந்த மாணவி என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Conclusion
சென்னையில் குருக்களின் மீது பூணூல் அறுத்து தாக்குதல் என்று பரவும் செய்தி தவறானதாகும். இது கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Report From, BBC Tamil, dated April 21, 2015
Report by Hindu Tamil, dated April 22, 2015