Claim: சென்னையில் தேங்கிய மழைநீர் புல்டோசர் மூலமாக லாரியில் ஏற்றப்படுகிறது.
Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோ கடந்த 2018ஆம் ஆண்டு முதலே பல்வேறு மொழிகளில் பரவி வருகிறது.
சென்னையில் தேங்கிய மழைநீர் புல்டோசர் மூலமாக அகற்றப்படுவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
”இந்திய வரலாற்றில் இப்படி ஒரு அறிவார்ந்த கூட்டத்தை யாராவது பார்த்து இருக்கிறீர்களா?” என்று இந்த வீடியோ வைரலாகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சென்னை இரயில் நிலையத்தில் படகு செல்வதாக பரவும் மும்பை படம்!
Fact Check/Verification
சென்னையில் தேங்கிய மழைநீர் புல்டோசர் மூலமாக அகற்றப்படுவதாகப் பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அது கடந்த 2018ஆம் ஆண்டு முதலே பல்வேறு மொழிகளிலும் பரவி வருகிறது என்பதை கண்டறிய முடிந்தது.

finofilipino என்கிற பக்கத்தில் இந்த வீடியோ கடந்த டிசம்பர் 06, 2018ல் பதிவிடப்பட்டிருந்தது. Khushal Pakistan என்கிற சமூக வலைத்தளப்பக்கத்தில் கடந்த ஜூலை 24, 2022 அன்று இந்த வீடியோ பதிவாகியுள்ளது.
எனவே, வைரலாகும் வீடியோ பல்வேறு மொழிகளிலும் பல வருடங்களாகப் பகிரப்பட்டு வருவதும், அதற்கும் சென்னை மழை வெள்ளத்திற்கும் தொடர்பில்லை என்பது இதன் மூலமாக உறுதியாகிறது.
Also Read: சென்னை மழையில் வலம் வரும் முதலை என்று பரவும் தவறான பழைய புகைப்படம்!
Conclusion
சென்னையில் தேங்கிய மழைநீர் புல்டோசர் மூலமாக அகற்றப்படுவதாகப் பரவும் வீடியோ தகவல் ஒரு வதந்தி என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Report from Aparat
Facebook Post From, Khushal Pakistan, Dated July 24, 2022
Report from finofilipino, December 06, 2018
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)