Fact Check
மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியினர் செருப்பால் அடித்துக்கொள்ளும் காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

Claim: மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியினர் செருப்பால் அடித்துக்கொள்ளும் காட்சி
Fact: இச்சம்பவம் உண்மையில் 2019 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தில் நடந்ததாகும்.
மத்திய பிரதேசத்தில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகிய பிறகு செருப்பால் அடித்துக் கொள்ளும் காங்கிரஸ் கட்சியினர் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”மத்திய பிரதேச காங்கிரஸ் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் மகிழ்ச்சியில் இனிப்பு வழங்கி கொண்டாடிய தருணம்” என்று இந்த வீடியோ வைரலாகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கேரள லுலு மாலில் இந்திய தேசியக் கொடியை விட பாகிஸ்தான் கொடி பெரியதாக வைக்கப்பட்டதா?
Fact Check/Verification
மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியினர் செருப்பால் அடித்துக்கொள்ளும் காட்சி என்று பரவும் வீடியோ காட்சி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
அதில், கடந்த அக்டோபர் 14 அன்று வைரல் வீடியோவானது ராஜஸ்தானில் அடித்துக்கொண்ட பாஜகவினர் என்று பரவிய நிலையில் அதனை நாம் உண்மையறியும் சோதனைக்கு உட்படுத்தியுள்ளோம்.
அதன்படி, “BJP MP Sharad Tripathi beats MLA with shoes” என தலைப்பிட்டு TV9 Bharatvarsh யூடியூப் பக்கத்தில் வைரலாகும் இதே வீடியோவை 06 மார்ச், 2019 அன்று பதிவேற்றம் செய்திருப்பதை காண முடிந்தது.
வைரலாகும் வீடியோவில் காணப்படும் இச்சம்பவம் பற்றி தமிழக ஊடகங்களும் அன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் அச்சம்பவமானது உத்திரப்பிரதேசத்தில் நடந்தது என்றும், உள்ளூர் சாலையில் பாஜக எம்.பி சரத் திரிவேதியின் பெயர் போடாதது தொடர்பாக அவருக்கும் பாஜக எம்.எல்.ஏ. ராகேஷ் சிங்குக்கும் ஏற்பட்ட தகராறே இச்சம்பவம் என்றும் அறிய முடிந்தது.
இந்த வீடியோவே தற்போது மபியில் அடித்துக்கொள்ளும் காங்கிரஸ் கட்சியினர் என்பதாகப் பரவுகிறது என்பது உறுதியாகிறது.
Also Read: இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் இறந்த காஸாவின் குழந்தைகள் என்று பரவும் சிரியாவின் பழைய படம்!
Conclusion
மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியினர் செருப்பால் அடித்துக்கொள்ளும் காட்சி என்று பரவும் வீடியோ காட்சி பாஜகவினரின் பழைய வீடியோ என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் மூலமாக உறுதியாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Report from TV9 Bharatvarsh, Dated March 06, 2019
YouTube Video from Puthiyathalaimurai, Dated March 06, 2019
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)