திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkஇஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் இறந்த காஸாவின் குழந்தைகள் என்று பரவும் சிரியாவின் பழைய படம்!

இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் இறந்த காஸாவின் குழந்தைகள் என்று பரவும் சிரியாவின் பழைய படம்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் இறந்த காஸாவின் குழந்தைகள்

Fact: வைரலாகும் படம் 10 ஆண்டுகளுக்கு முன்பு 2013 ஆம் ஆண்டு சிரியாவில் எடுக்கப்பட்ட பழைய படமாகும்.

இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் இறந்த காஸாவின் குழந்தைகள் என குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்கள் பரவி வருகின்றது.

இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் இறந்த காஸாவின் குழந்தைகள் என்று பரப்பப்படும் படம்

X Link | Archived Link

இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் இறந்த காஸாவின் குழந்தைகள் என்று பரப்பப்படும் படம்

X Link | Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கேரள லுலு மாலில் இந்திய தேசியக் கொடியை விட பாகிஸ்தான் கொடி பெரியதாக வைக்கப்பட்டதா?

Fact Check/Verification

இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் இறந்த காஸாவின் குழந்தைகள் என்று புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து, அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம்.

இத்தேடலில் rt.com எனும் இணைய ஊடகத்தில் “Russia suggests Syria ‘chemical attack’ was ‘planned provocation’ by rebels” என்று தலைப்பிட்டு ஆகஸ்ட் 21, 2013 அன்று வெளியிட்ட செய்தியில் வைரலாகும் இதே படத்தை பயன்படுத்தி இருப்பதை காண முடிந்தது.

இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் இறந்த காஸாவின் குழந்தைகள் என்று பரப்பப்படும் படம்

தொடர்ந்து தேடியதில், சிரியன் படையினர் வீசிய இரசாயண குண்டால் இக்குழந்தைகள் கொல்லப்பட்டதாக சிரிய உள்நோட்டு போராளிகள் குற்றம் சாட்டி இப்படத்தை வெளியிட்டதாக albawaba எனும் இணைய ஊடகமானது செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. இச்செய்தியானது ஆகஸ்ட் 22, 2013 அன்று வெளிவந்திருந்தது.

இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் இறந்த காஸாவின் குழந்தைகள் என்று பரப்பப்படும் படம்

தொடர்ந்து தேடியதில் மேலும் சில ஊடகங்களும் வைரலாகும் இப்படம் ஆகஸ்ட் 21, 2013 அன்று சிரியாவில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அவற்றை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.

இதனடிப்படையில் காண்கையில் வைரலாகும் படம் தற்போது காஸாவில் எடுக்கப்பட்டதல்ல; அது கடந்த 2013 ஆம் ஆண்டு சிரியாவில் எடுக்கப்பட்டது என அறிய முடிகின்றது.

Also Read: கத்தாரில் காரை நசுக்கும் ஆக்டோபஸ் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Conclusion

இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் இறந்த காஸாவின் குழந்தைகள் என்று பரப்பப்படும் படம் 10 ஆண்டுகளுக்கு முன்பு சிரியாவில் எடுக்கப்பட்ட பழைய படமாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Report from rt.com, Dated August 21, 2013
Report from albawaba.net, Dated August 22, 2013

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular