Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: தமிழக அரசு பள்ளியில் கிறிஸ்துவ போதனை
Fact: வைரலாகும் வீடியோ கடந்த 2013ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.
தமிழக அரசு பள்ளியில் கிறிஸ்துவ மத போதனை என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“ஏமிரா இதி? பெண்கள் பள்ளியில் ஒரு ஆண் அடுத்த வீட்டு பெண் பிள்ளைகளை எப்படி தொட்டு ஜாபம் செய்து இப்படி மயக்க நிலை அடையச் செய்வார்? இந்த மாதிரியான விஷயங்களுக்கெல்லாம் எப்படி பள்ளிகளில் நடத்த அனுமதிப்பீர்கள்?” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: விஜய் நடித்த GOAT திரைப்படம் குறித்து எதிர்மறை விமர்சனம் செய்த ரசிகர் என்று பரவும் வீடியோ உண்மையா?
தமிழக அரசு பள்ளியில் கிறிஸ்துவ மத போதனை என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த 2018ஆம் ஆண்டு Kaliraj Panneerselvam என்கிற யூடியூப் பக்கத்தில் ”Kevalamana seyal namma tamil nadu” என்று இந்த வீடியோ இடம்பெற்றிருந்தது. அந்த வீடியோவில் JCILM என்கிற Logo இடம்பெற்றிருப்பதையும் நம்மால் கண்டறிய முடிந்தது.
தொடர்ந்து தேடியபோது, மற்றொரு யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோ கடந்த 2013ஆம் ஆண்டு, “St. Joseph’s Convent, நாகர்கோயில்” என்று இடம்பெற்றிருந்தது. ஆனால், அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எங்கும் இடம்பெற்றிருக்கவில்லை.
Also Read: சென்னையில் நடைபெற்ற F4 கார் ரேஸில் கலந்து கொண்டாரா நடிகை நிவேதா பெத்துராஜ்?
தமிழக அரசு பள்ளியில் கிறிஸ்துவ மத போதனை என்று பரவும் வீடியோ கடந்த 2013ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
YouTube Video from e kuruvi, Dated September 18, 2013
YouTube Video from, Kaliraj Panneerselvam, Dated September 27, 2018
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
June 12, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 9, 2025
Ramkumar Kaliamurthy
June 2, 2025