ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkஇடியும் நிலையில் உள்ள ஓங்கூர் ஆற்றுப்பாலம்... வைரலாகும் வீடியோவின் உண்மைத்தன்மை!

இடியும் நிலையில் உள்ள ஓங்கூர் ஆற்றுப்பாலம்… வைரலாகும் வீடியோவின் உண்மைத்தன்மை!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: ஓங்கூர் ஆற்றுப்பாலம் இடியும் நிலையில் உள்ளதாக பரவும் வீடியோ.

Fact: வைரலாகும் வீடியோ 2022 ஆம் ஆண்டின் பழைய வீடியோவாகும். 2022 ஆம் ஆண்டிலேயே அப்பாலம் பழுது செய்யப்பட்டு, தற்போது எந்த பழுதும் இல்லாமல் பயன்பாட்டில் உள்ளது

“இந்த பாலம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம், வண்டி போகும்போது பாலம் கீழே இறங்குகிறது” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

ஓங்கூர் ஆற்றுப்பாலம் இடியும் நிலையில் உள்ளதாக பரவும் வீடியோ.

X Link | Archive Link

ஓங்கூர் ஆற்றுப்பாலம் இடியும் நிலையில் உள்ளதாக பரவும் வீடியோ.

Archive Link

ஓங்கூர் ஆற்றுப்பாலம் இடியும் நிலையில் உள்ளதாக பரவும் வீடியோ.

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: துண்டு சீட்டு இல்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவேன் என்று கூறினாரா ஆளுநர்?

Fact Check/Verification

ஓங்கூர் ஆற்றுப்பாலம் இடியும் நிலையில் உள்ளதாக பரப்பப்படும் வீடியயோவில் ‘ஸ்பை’ என்ற லோகோ இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது. இதனை அடிப்படையாக வைத்து தேடியதில் ஸ்பை நியூஸ் எனும் யூடியூப் பக்கத்தில் ஜூலை 27, 2022 அன்று வைரலாகும் வீடியோ பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

ஓங்கூர் ஆற்றுப்பாலம் இடியும் நிலையில் உள்ளதாக பரவும் வீடியோ.

தொடர்ந்து தேடியதில் இதே யூடியூப் பக்கத்தில் ஜூலை 28, 2022 அன்று மற்றொரு வீடியோ பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அவ்வீடியோவில் பழுதடைந்த பாலத்தை சரிசெய்ய வேலைகள் நடப்பதாகவும், வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து தேடுகையில் மேலும் சில ஊடகங்களிலும் ஓங்கூர் பாலத்தில் பராமரிப்பு வேலைகள் நடப்பதாக செய்தி வந்திருப்பதை காண முடிந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

மேலும் தேடுகையில் ஒங்கூர் பாலத்தின் பணிகள் அனைத்தும் ஆகஸ்ட் 17, 2022க்குள் முடிக்கப்பட்டு, பாலத்தின் வழியாக போக்குவரத்து துவக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்ததாக தமிழக அரசு சார்பில் செய்தி வெளியீடு வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

Powered By EmbedPress

தொடர்ந்து தேடுகையில்  தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் வைரலாகும் வீடியோ 2022 ஆம் ஆண்டின் பழைய வீடியோ என்பதை தெளிவுப்படுத்தி வீடியோ ஒன்று பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அவ்வீடியோவில் ஓங்கூர் பாலத்தின் நிலை தற்போதைய குறித்த காட்சியும் இடம்பெற்றிருந்தது. அதில் பாலம் தற்போது எந்த பழுதும் இல்லாமல் சரியாக இருப்பதை காண முடிந்தது.

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் ஓங்கூர் ஆற்றுப்பாலம் பழுதடைந்ததாக பரவும் வீடியோ இரண்டு ஆண்டுகளுக்கு முந்திய பழைய வீடியோ என்பதும், இத்தகவல் வெளிவந்த பிறகு பாலம் பழுது பார்க்கப்பட்டுள்ளது என்பதும் அறிய முடிகின்றது.

Also Read: தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிட’நல் திருநாட்டிற்கு பதிலாக ‘தமிழர்’நல் திருநாடு என்று குறிப்பிட்டு நியூஸ்கார்ட் வெளியிட்டதா ஆனந்த விகடன்?

Conclusion

ஓங்கூர் ஆற்றுப்பாலம் இடியும் நிலையில் உள்ளதாக பரப்பப்படும் வீடியோ 2022 ஆம் ஆண்டின் பழைய வீடியோவாகும். 2022 ஆம் ஆண்டிலேயே அப்பாலம் பழுது செய்யப்பட்டு, தற்போது எந்த பழுதும் இல்லாமல் பயன்பாட்டில் உள்ளது.

இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
YouTube video by Spy News, Dated July 27, 2022
YouTube video by Spy News, Dated July 28, 2022
Press Release from TN DIPR, Dated August 10, 2022
X Post By TN Fact Check, Dated October 23, 2024

உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular