Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
திமுக எம்.எல்.ஏ.க்களின் தோலை உரித்து விடுவேன் என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறினார்.

சமூக ஊடகங்களில் வந்த பதிவை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Also Read: ‘I love Muhammad’ ஸ்டிக்கர் ஒட்டிய இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?
திமுக எம்.எல்.ஏ.க்களின் தோலை உரித்து விடுவேன் என்று ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கூறியதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து அவ்வீடியோவை கவனமுடன் ஆராய்ந்தோம்.
அதில் வைரலாகும் வீடியோவில் காணப்பட்ட மொழிப்பெயர்ப்பு தவறாக இருந்ததை நம்மால் காண முடிந்தது.
அவ்வீடியோவில் திமுக எனும் பெயரையே பவன் கல்யாண் உச்சரித்திருக்கவில்லை. மாறாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் குறித்தே அவர் பேசி இருந்தார்.
வைரலாகும் வீடியோவில், “நீங்கள் யுத்தமென்று சொல்லுங்கடா, நீங்கள் சொல்லுங்கடா,.. இரும்புக் கம்பியா? ஹாக்கி கட்டையா?.. இரும்புக்கம்பியா, வெறும் கையா எல்லாவற்றுக்கு நான் தயார் டா… என் ஆட்களை கூட நான் அழைக்கவில்லை டா. நீங்கள் வாங்கடா.. எவ்வளவு YCP (ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி) ரவுடி எம்.எல்.ஏ வருகின்றீர்களோ… சவால் விட்டு கூறுகின்றேன்… வாங்கடா எல்லோரும்… வாங்கடா எல்லோரும் வெளியே… ஒவ்வொருத்தர் தோலையும் உரித்து விடுவேன் இன்னொரு வார்த்தை பேசினால்…” என்றே பவன் கல்யாண் பேசி இருந்தார்.
இதனையடுத்து தேடுகையில் பவன் கல்யாணின் கட்சியான ஜனசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வைரலாகும் வீடியோவின் முழுப்பகுதி அக்டோபர் 18, 2022 அன்று பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
அவ்வீடியோவில் அச்சமயத்தில் ஆந்திராவில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் குறித்து மிக ஆவேசமாக பவன் கல்யாண் பேசி இருந்தார். அவ்வீடியோவின் 14:46 நேரத்தில் வைரலாகும் வீடியோவில் காணப்பட்ட பகுதி இடம்பெற்றிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் குறித்து “Pawan Kalyan launches tirade against YSRCP leaders, raises slipper to warn them” என்று தலைப்பிட்டு மேற்கண்டநிகழ்வு குறித்து தி நியூஸ் மினிட் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
அதாவது பவன் கல்யாண் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் குறித்து வசைப்பொழிவு செய்ததோடு, செருப்பு காட்டி அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார் என்று தலைப்பிட்டு நியூஸ் மினிட் செய்தி வெளியிட்டிருந்தது.
அச்செய்தியில் வைரலாகும் வீடியோவில் பவன் கல்யாண் பேசிய கருத்துகள் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. அக்கருத்துகள் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு எதிராக பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் குறித்து பேசிய கருத்தை திமுக எம்.எல்.ஏ.க்கள் குறித்து பேசியதாக தவறாக திரித்து பரப்பப்படுகின்றது என தெளிவாகின்றது.
Sources
YouTube Video by Janasena Party, dated October 18, 2022
Report by The News Minute, dated October 18, 2022
Ramkumar Kaliamurthy
November 28, 2025
Ramkumar Kaliamurthy
November 27, 2025
Ramkumar Kaliamurthy
October 25, 2025