Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமைந்துள்ள பாரசீக பாலத்தின் வடிவமைப்பு
வைரலாகும் புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்டதாகும்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமைந்துள்ள பாரசீக பாலத்தின் வடிவமைப்பு என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“ஈரானின் தெஹ்ரானில் அமைந்துள்ள “பாரசீக பாலம் என்று அழைக்கப்படும் பாலம் மனதைக் கவரக்கூடிய கட்டிடக்கலை அம்சத்தைக் கொண்டுள்ளது” என்பதாக இந்த புகைப்படம் பரவுகிறது.

X Link/Archived Link


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மாரடைப்பால் மரணமடைந்தார் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமைந்துள்ள பாரசீக பாலத்தின் வடிவமைப்பு என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது Iran Photos என்கிற பக்கத்தில் AI design என்று குறிப்பிட்டு இப்புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

மேலும், இப்புகைப்படத்தின் ஓரத்தில் இடம்பெற்றிருந்த லோகோவை வைத்து ரிவர்ஸ் சர்ச் மூலமாக தேடியபோது Pooriya Zamani என்கிற நபரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த ஜூன் 2ஆம் தேதி இந்த புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அதுமட்டுமின்றி, ”he city’s respect for its citizens ‘Shiraz V3’ – work by @pooriyazamani
Generated with #Ai” என்று இப்புகைப்படம் குறிப்பிடப்பட்டிருந்தது.

அவரது பக்கத்தில் இந்த புகைப்படங்கள் மட்டுமின்றி இதேபோன்று கட்டிடக்கலை தொடர்பான பல்வேறு புகைப்படங்கள் AI மூலமாக உருவாக்கப்பட்டு பதிவிடப்பட்டுள்ளது.
வைரலாகும் இந்த புகைப்படத்தை Sight Engine செயலி இணையப்பக்கம் மூலமாக ஆராய்ந்தபோது அதிலும் இப்புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்டது என்பது உறுதியாகியது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமைந்துள்ள பாரசீக பாலத்தின் வடிவமைப்பு என்று பரவும் புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Instagram Post From, Pooriya Zamani, Dated June 02, 2025
Sight Engine Tool
Facebook Post From, Iran Photos, Dated June 11, 2025
Ramkumar Kaliamurthy
October 23, 2025
Vijayalakshmi Balasubramaniyan
October 10, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 20, 2025