Fact Check
விஜய் திரிஷாவுடன் தீபாவளி கொண்டாடியதாக பரவும் படம் உண்மையானதா?
Claim
தவெக தலைவர் விஜய் திரிஷாவுடன் தீபாவளி கொண்டாடியதாக பரவும் படம்.
Fact
வைரலாகும் படம் செயற்கை நுண்ணறிவு மூலம் எடிட் செய்யப்பட்டதாகும்.
தவெக தலைவர் விஜய் திரிஷாவுடன் தீபாவளி கொண்டாடியதாக புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தலைவன் என்று சொல்லிக்கொள்ள விஜய்க்கு தகுதியில்லை என்று விமர்சித்தாரா இயக்குநர் சேரன்?
Fact Check/Verification
தவெக தலைவர் விஜய் திரிஷாவுடன் தீபாவளி கொண்டாடியதாக பரப்பப்படும் படத்தில் கூகுள் ஜெமினி ஏஐ-யின் லோகோ இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

இதனையடுத்து அப்படத்தை செயற்கை நுண்ணறிவு படங்களை கண்டறியும் undetectable.ai, illuminarty உள்ளிட்ட இணையத்தளங்கள் மூலம் பரிசோதித்தோம். அச்சோதனையில் வைரலாகும் படம் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது என பதில் வந்தது.


இதனையடுத்து நடிகை திரிஷாவின் சமூக ஊடகப் பக்கங்களில் ஆராய்கையில் வைரலாகும் படத்தில் காணப்படும் அதே நிற உடையில் கையில் நாயை பிடித்தவாறு புகைப்படம் ஒன்றை திரிஷா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

இப்படத்தை வைரலாகும் படத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில், இப்படத்தை கூகுள் ஜெமினி ஏஐ மூலம் எடிட் செய்தே வைரலாகும் படம் உருவாக்கப்பட்டுள்ளது என அறிய முடிந்தது.


Conclusion
தவெக தலைவர் விஜய் திரிஷாவுடன் தீபாவளி கொண்டாடியதாக பரப்பப்படும் பரவும் படம் செயற்கை நுண்ணறிவு மூலம் எடிட் செய்யப்பட்டதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Instagram Post by Actress Trisha, dated October 21, 2025.
Illuminarty Ai
Undetectable Ai